அன்பு காதல் பக்தி
நாம் பிறரிடத்தில் எதிர்பார்ப்பதை நாம் அவர்களுக்கு கொடுப்பது அன்புபிரதி பலன் எதிர்பாராமல் உதவி செய்வது அன்பு
அன்பானவரின் உரிமையை விட்டு கொடுக்காமல் அவருக்காக விட்டு கொடுப்பது அன்பு
தூய அன்பு கொண்டவரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தல் காதல்
உடல் மனதை தாண்டி இரு உயிர்கள் இணைவது காதல்
உயிர் கடவுளிடத்தில் கரைவது பக்தி
உண்மையான அன்பு என்பது குறைந்த பட்ச பக்தி
நிறைந்த அன்பு என்பது பரபக்தி இது பார பட்சமில்லாத பக்தி
___________________________________
பகை நட்பு
சமயம் பார்த்து கெடுப்பது பகைசமயம் பாராமல் உதவுவது நட்பு
பொறாமையால் வருவது பகை
அன்பு மிகுதியால் வருவது நட்பு
கோபமாய் முறைத்தால் வருவது பகை
அன்பாய் சிரித்தால் வருவது நட்பு
நட்பு பகையாய் மாறுவதற்கு காரணம் சூழ்ச்சி
பகை நட்பாய் மாறுவதற்கு காரணம் அன்பின் சுழற்சி .
___________________________________________
யாரும் கருத்து சொல்ல வேண்டாம்
யாரும் இனி உலகத்தில் புதிய கருத்தை சொல்ல போவதில்லை , ஏனெனில் ஏற்கனவே நம் முன்னோர்கள் நமக்கு தேவையான அணைத்து கருத்துகளையும் சொல்லி விட்டார்கள்பிறகு நாம் என்ன செய்ய ?
அவர்கள் சொன்ன நல்ல கருத்துக்களை சிந்தித்து வாழ்ந்தால் போதுமானது ஏனெனில் நம் முன்னோர்கள் காட்டிய நல்ல வழியில் வாழ்ந்தால்தான் நம் வாழ்வில் அமைதி , ஆனந்தம் மற்றும் உற்சாகம் என்றும் குன்றாமல் இருக்கும்.
________________________________________________
மாயை ஒரு ஆடை
எது உடலை மறைக்கிறதோ அது ஆடை !எது உன்னை மறைக்கிறதோ அது மாயை !!
__________________________________________________
உண்மையில் பொருள் எது ?
திடமானவற்றை நாம் பொருள் என்கிறோம்.கனமானவற்றை நாம் பொருள் என்கிறோம் .
வார்த்தைக்கு, செய்யுளுக்கு அல்லது பாடலுக்கு பொருள் [அர்த்தம் ] தருகிறோம்
உண்மையில் பொருள் எது ?
திடமானது ஒரு நாள் அழிந்து விடும்.
கனமானது ஒரு நாள் அழிந்து விடும் .
வார்த்தைக்கு , செய்யுளுக்கு அல்லது பாடலுக்கு பொருள் தரும் மொழி ஒரு நாள் அழிந்து விடும் .
உண்மையில் பொருள் என்பது எது அழியாதோ அதுவே உண்மை பொருள்.
No comments:
Post a Comment