Translator

Search This Blog

01.01.10 TO 31.03.10

Date: 12th January 2010
Dear Our Valuable Customers, From January 13th to January 17th Pongal holiday
Thankyou
Mohanraj
__________________________________________________
தினகரன்
தனியார் நிதி நிறுவன மோசடிமுதலீடு செய்தவர்களுக்குபணம் பட்டுவாடா துவக்கம்
திருப்பூர், பிப். 10: திருப்பூர், அவிநாசி சாலையில், செயல்பட்டு வந்த ‘பாசி போரெக்ஸ் டிரேடிங்’ எனும் நிதி நிறு வனம், தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டு இயங்கி வந்தது. டெபாசிட்களுக்கு கூடுதல் போனஸ் தருவதாக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் நடந்து வந்ததாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் இந்த நிதிநிறுவனத்துக்கு போலீசார் ‘சீல்‘ வைத்தனர்.இதில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் வழங்கும் பணி நேற்று முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. அருண் கூறுகையில், “உயர்நீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைத்து முதலீட்டாளர்கள் கேட்கும் பட்சத்தில் அவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட காவல் அலுவலகத்தில் பணம் திரும்ப வழங்க கோரி முதலீடு செய்தவர்கள் புகார் அளித் தால், அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 500 புகார்கள் பெறப்பட்டுள்ளது. நேற்று 47 பேருக்கு ரூ.50 லட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பணம் வழங்கப்படும். புகாரின் அடிப்படையில் வரிசையாக பணம் வழங்கப்பட்டு வருகிறது, ” என்றார். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்க ஏராளமானோர் திரளத்துவங்கியுள்ளனர்.
________________________________________________
தினமலர்
திருப்பூர், பிப்.17:
திருப்பூர் மோசடி நிதி நிறுவனம் சார்பில் சிங்கப்பூர் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.96 கோடியை காவல் துறை முடக்கி வைத்துள்ளது. மேலும், இந்த மோசடி விவகாரத்தில் காவல் துறையினருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மத்திய குற்றப்பிரிவைச் சேர்ந்த 2 காவல் ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 9 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் அவிநாசி சாலையில் இயங்கி வந்த பாசி ஃபோரெக்ஸ் டிரேடிங் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீஸôர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அந்நிதிநிறுவனம் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்படாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் அந்நிதிநிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு பணத்தை பெற்றுத்தர மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டதை அடுத்து மாவட்ட எஸ்பி தலைமை யில் குழு அமைக்கப்பட்டு முதலீடு செய்தவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுவதுடன், தகுதியான மனுதாரர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த பணம் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 14, 800 முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பெற்றுத்தரும் மனு அலித்துள்ளதாகவும், அதில் 242 பேருக்கு சுமார் ரூ.1.62 கோடி பணம் திருப்பியளிக்கப் பட்டுள்ளதாகவும் மாவட்ட எஸ்பி ஏ.அருண் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: திருப்பூர் பாசி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களில் 15 சதவீதம் பேரிடம் இருந்து மட்டுமே இதுவரை மனுக்கள் வரப்பெற்றுள்ளது. அதன்படி, இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ.300 கோடிக்கும் மேலாக இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து, நிதி நிறுவனம் சார்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த எச்எஸ்பிசி வங்கியில் முதலீடு செய்யப்பட்ட ரூ.96 கோடியை காவல்துறை முடக்கியுள்ளது. அப்பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பியளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலீட்டுத் தொகை அடிப்படையில் 3 பிரிவுகளில் பெறப்படும் மனுக்களை பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு விரைவில் அவர்களின் பணம் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், இந்நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திருப்பியளிப்பதில் மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் சண்முகய்யா, மோகன்ராஜ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், 9 காவலர்கள் பணியிடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். இம்மோசடி நிதிநிறுவன விவகாரத்தில் உயரதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.
____________________________________________
தினகரன்
11.02.2010.
நிதி நிறுவனம் மோசடி எஸ்.பி. அலுவலகம் டெபாசிட்தாரர் முற்றுகை
காசோலை கூடாது போலீசார் உத்தரவு
பாஸி போரெக்ஸ் நிறுவனத்தில் இதுவரை காசோலைகளே வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், நேற்று அனைவருக்கும் ரொக்கப்பணமாக வினியோகிக்கப்பட்டது. “இதுவரை முதலீட்டாளர்களுக்கு ஓரிரு முறை முதலீடு தொகைக்கான செக் வழங்கப்பட்டது. ஆனால், செக் பணமின்றி திரும்பியது. இதன் காரணமாக பிரச்னை ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில், செக் வழங்க கூடாது என்றும், அனைவருக்கும் ரொக்கப்பணமாக வழங்க வேண்டும் என நிதிநிறுவனத்தினரை கேட்டுக்கொண்டுள்ளோம். அதன்படி, அனைவருக்கும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது, “ என்றார் எஸ்.பி. அருண்.
__________________________________________
திருப்பூர், பிப்.11:
மூடப்பட்ட நிதி நிறுவனத்தினரிடம் இருந்து பணத்தை பெற்றுத்தரக் கோரி ஒரே நாளில் எஸ்.பி. அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.
திருப்பூர், அவிநாசி சாலையில், ‘பாஸி போரெக்ஸ் டிரேடிங்‘ என்ற நிதி நிறுவனம் செயல்பட்டது. தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டு இயங்கியது.டெபாசிட்களுக்கு கூடுதல் போனஸ் தருவதாக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து செயல்பட்ட இந்த நிறுவனம், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் நடந்ததாக கூறி கடந்த செப்டம்பரில் இந்த நிறுவன இயக்குனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நிதிநிறுவனத்துக்கு போலீசார் ‘சீல்‘ வைத்தனர்.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாவட்ட எஸ்.பி. தலைமையில் தனி குழு அமைத்து, டெபாசிட்தாரர்களுக்கு அவர்கள் டெபாசிட் செய்த தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதற்காக அமைக்கப்பட்ட குழு கடந்த மாதம் மறுசீரமைக்கப்பட்டது. எஸ்.பி. அருண் தலைமையில், திருப்பூர் டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், ராஜேந்திரன் மற்றும் 3 எஸ்.ஐ.க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.முதலீடு செய்தவர்களுக்கு பணம் வழங்கும் பணி நேற்று முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. “முதலீட்டாளர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணம் பெற்றுத்தரக்கோரி புகார் அளித்தால், பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்“ என மாவட்ட எஸ்.பி. அருண் தெரிவித்தார்.இந்நிலையில், நேற்று ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் பணத்தை திரும்ப பெற்றுத்தரக் கோரி, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். தாங்கள் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிய காசோலைகளுடன் இவர்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் வந்திருந்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட எஸ்.பி. அருண் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
___________________________________________
தினகரன்(18/02/10)
புகார் மனுக்கள் 12 ஆயிரத்தை தாண்டியதுமோசடி நிறுவனத்தில் ஏமாந்தவர்களுக்குஇதுவரை ரூ 1.70 கோடி வினியோகம்.
திருப்பூர், பிப்.18:
திருப்பூர் பாசி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையை திரும்ப பெற்றுத்தரக்கோரி மாவட்ட காவல்அலுவலகத்தில் புகார் செய்து வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 12 ஆயிரத்தை தாண்டியது. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.70 கோடி வரை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. அருண் தெரிவித்தார்.திருப்பூர், அவிநாசி சாலையில், செயல்பட்டு வந்த ‘பாசி போரெக்ஸ் டிரேடிங்’ எனும் நிதி நிறுவனம், தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டு இயங்கி வந்தது. டெபாசிட்களுக்கு கூடுதல் போனஸ் தருவதாக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் நடந்து வந்ததாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் இந்த நிறுவன இயக்குனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நிதிநிறுவனத்துக்கு போலீசார் ‘சீல்’ வைத்தனர்.இது தொடர்பான வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட எஸ்.பி. தலைமையில் தனி குழு அமைத்து, டெபாசிட்தாரர்களுக்கு அவர்கள் டெபாசிட் செய்த தொகையினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. அதன்படி, மாவட்ட எஸ்.பி. அருண் தலைமையில், குழு அமைக்கப்பட்டது.இதற்காக ஆய்வு பணிகளை மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி. அருண், முதலீடு செய்தவர்கள் குறித்த விவரத்தினை சேகரித்து பணம் வழங்கும் பணி துவங்கி நடந்துவருவதாக அண்மையில் அறிவித்தார். மாவட்ட காவல் அலுவலகத்தில் பணம் திரும்ப வழங்க கோரி முதலீடு செய்தவர்கள் புகார் அளித்தால், அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.அதன்படி, திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நிதிநிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் மனுக்களை வழங்கி வந்தனர். இந்நிலையில், நேற்று பணத்தை திரும்பி வழங்க கோரி மனுசெய்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது.ஓவ்வொரு ஆயிரம் மனுக்களையும் சீனியாரிட்டி முறையில் பிரித்து அடுக்கி, அவற்றை போலீசார் வைத்துள்ளனர். இவர்களது மனுக்கள் மீது சீனியாரிட்டி அடிப்படையில் பணத்தை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் புகார்களுக்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மாவட்ட காவல் அலுவலத்தில் ஏராளமானோர் புகார் மனுக்களை வழங்கி வருகின்றனர்.இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யிடம் கேட்டபோது, ‘’புகார் மனுக்கள் சீனியாரிட்டி அடிப்படையில் பிரிக்கப்பட்டு தினமும் பணம் வினியோகம் நடந்து வருகிறது. முதல்கட்டமாக ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவான தொகையை முதலீடு செய்தவர்களுக்கு மட்டும் பணம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. குறைந்த அளவிலான தொகையை அதிகம் பேர் முதலீடு செய்துள்ளதால் புகார்தாரர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இம்முறை பின்பற்றப்படுகிறது. இதுவரை 242 நபர்களுக்கு ரூ.1.70 கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், ” என்றார்.
____________________________________________
திருப்பூர் நிதி நிறுவன விவகாரம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்
திருப்பூர் : திருப்பூரில் செயல்பட்ட "பாசி பாரெக்ஸ் டிரேடிங் இந்தியா பி., லிமிடெட்' நிதி நிறுவனத்தில் பணம் மூதலீடு செய்திருந்தவர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்து வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பான பொறுப்புகள், கோவை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன.இந்நிதி நிறுவனத்தில், தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்திருந்தனர். இந்நிறுவனம் மீது திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி, எஸ்.பி., அலுவலகத்தில் 20 ஆயிரம் பேர் மனு கொடுத்துள்ளனர். அந்நடவடிக்கையில், எஸ்.பி., அருண் ஈடுபட்டார். முதல்கட்டமாக, 50 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.தினமும் நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் மனு கொடுப்பதால், அவற்றை பெறுவதிலும், வரிசைப்படுத்தவதிலும் எஸ்.பி., அலுவலக பணியாளர்கள் நேரத்தை செலவிட நேரிடுகிறது. அன்றாட பணிகளை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், இந்நிதி நிறுவன விவகாரத்தை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றுமாறு எஸ்.பி., அருண், டி.ஜி.பி., அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார். இதையடுத்து கோவை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி, டி.ஜி.பி., அலுவலகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
__________________________________________________
01.03.2010
தினகரன்
பாசி நிதி நிறுவன மோசடி வழக்குபொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்
திருப்பூர், மார்ச் 1:
அவிநாசி சாலையில், செயல்பட்டு வந்த ‘பாசி போரெக்ஸ் டிரே டிங்‘ எனும் நிதி நிறுவனம், தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டு இயங்கி வந்தது. இந்த நிறுவனம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததையடுத்து, பணத்தை திரும்ப பெற்றுத்தர வலியுறுத்தி கடந்த இரு மாதங்களாக ஆயிரக்கணக்கா னோர் புகார் அளித்துள்ளனர்.இதுவரை பணத்தை திரும்பி வழங்க கோரி மனுசெய்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது. பணத்தை பெற்றுத்தருவது போலீசாருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக வழக்கமான பணிகளை கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த வழக்கை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவில் இருந்து, பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்.பி. அருண் கோரியிருந்தார். இதையேற்று தமிழக டி.ஜி.பி. லத்திகாசரண், இந்த நிதி நிறுவன மோசடி வழக்கினை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்படி, இந்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் பொருளாதார குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்படுகிறது. மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கப்பட்ட 16 ஆயிரம் மனுக்களும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், இந்த வழக்கினை இனி அவர்கள் தான் விசாரிப்பார்கள் என்றும் மாவட்ட எஸ்.பி. அருண் தெரிவித்தார்.இந்நிலையில், திருப்பூர் மாவட்ட எஸ்..பி. அலுவலகத்தில் இருந்த பாசி நிதி நிறுவனம் சார்ந்த வழக்கு ஆவணங்கள் அனைத்தும் நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, “பாசி நிதி நிறுவன வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கோவைக்கு அனுப்பப்படும் என தெரிகிறது. இனிமேல் பாசி நிதி நிறுவனம் தொடர்பான புகார்களை கோவையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தெரிவிக்கலாம், “ என்றார்.
______________________________________________
02.03.2010
பாஸி நிதி நிறுவன வழக்கு முதலீட்டாளர்களுக்கு பண வினியோகம் நிறுத்தம் பொருளாதார குற்றப்பிரிவு மாற்றம் எதிரொலி
திருப்பூர், மார்ச் 2: பாஸி நிதி நிறுவன வழக்கு திடீரென பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதால், பணம் வினியோகிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். திருப்பூர், அவிநாசி சாலையில், செயல்பட்டு வந்த ‘பாஸி போரெக்ஸ் டிரேடிங்‘ எனும் நிதி நிறு வனம், தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டு இயங்கி வந்தது. டெபாசிட்களுக்கு கூடுதல் போனஸ் தருவதாக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் நடந்து வந்ததாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் இந்த நிறுவன இயக்குனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நிதிநிறுவனத்துக்கு போலீசார் ‘சீல்‘ வைத்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட எஸ்.பி. தலைமை யில் தனி குழு அமைத்து, டெபாசிட்தாரர்களுக்கு அவர்கள் டெபாசிட் செய்த தொகையினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதற்காக ஆய்வு பணிகளை மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி. அருண், முதலீடு செய்தவர்கள் குறித்த விவரத்தினை சேகரித்து பணம் வழங்கும் பணியை துவக்கி மேற்கொண்டார். 10 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பண வினியோகிக்கும் பணியின் போது, சுமார் 4 கோடி அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இருதினங்களுக்கு முன்னர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, கோப்புகள் மற்றும் விண்ணப்பங்கள் அனைத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்துக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பண வினியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். “திருப்பூரில் கடந்த சில தினங்களாக பணம் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், எப்போது முதல் பணம் வினியோகிக்கப்படும் என்ற விவரங்கள் தெரியவில்லை. எங்கு இது தொடர்பாக முறையிடுவது என்பதும் தெரியவில்லை, “ என்கின்றனர் முதலீட்டாளர்கள். இந்நிலையில், சென்னைக்கு சென்ற கோப்புகள் அனைத்தும் கோவைக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது. எங்கு புகார் செய்வது? பாஸி நிதி நிறுவன வழக்கு, திருப்பூர் மாவட்ட காவல்துறையிடம் இருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள போதும், இன்னும் திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதையடுத்து, இது தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு திருப்பூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான விளக்கங்களை பெற கோவை பொருளாதா குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணுக்கு (0422 & 2303669) தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இதுவரை எங்களுக்கு எந்த உத்தரவும் கிடைக்கப்பெறவில்லை. உத்தரவு கிடைத்த பின்னர் தான் புகார் பெறப்படும் என்றார். இதன் காரணமாக என்ன செய்வது என தெரியாமல் முதலீட்டாளர்கள் குழம்பியுள்ளனர்.
______________________________________________
பாஸி நிதி நிறுவன மோசடிகோவையில் விரைவில் விசாரணை துவக்கம்
கோவை, மார்ச் 5:
திருப்பூர் பாஸி நிதி நிறுவன மோசடி குறித்து கோவையில் விரைவில் விசாரணை நடக்கிறது.திருப்பூரில் செயல்பட்டு வந்த பாஸி போரக்ஸ் டிரேடிங் நிதி நிறுவனம் தங்கள் முதலீட்டு பணத்தை மோசடி செய்துவிட்டதாக ஏராளமானோர் புகார் கூறினர். 30 ஆயிரம் பேரிடம் ரூ.200 கோடி வரை மோசடி நடந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து திருப்பூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதால் இந்த புகார்களை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கவும், இதற்காக 3 டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ் பெக்டர்கள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தும் டிஜிபி லத்திகா சரண் உத்தரவிட்டார்.இதை அறிந்த நூற்றுக்கணக்கான புகார்தாரர்கள் தினசரி கோவை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால் சிறப்பு குழு விசாரிக்க தனி இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.விரைவில் புதிய இடம் தேர்வு செய்யப்படும். அதன்பிறகு புகார்கள் பெறப்பட்டு விசாரணை துவங்கும் என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
______________________________________________
நிதி நிறுவன இயக்குனர் மாயமான வழக்கு ஆள் கடத்தல் வழக்காக மாற்றம்
திருப்பூர், மார்ச் 5:
நிதி நிறுவன இயக்குனர் மாயமான வழக்கு, ஆள் கடத்தல் வழக்காக மாற்றப்பட்டது. இதில் போலீஸ் அதிகாரிகள் உத்தரவின் பேரில் கடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ள நிலையில, இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர், அவிநாசி சாலையில் செயல்பட்டு வந்த ‘பாசி போரெக்ஸ் டிரேடிங்‘ எனும் நிதி நிறுவனம், மோசடி செய்த தாக எழுந்த விவகாரத்தில், நிதி நிறுவனத்துக்கு ஆதர வாக செயல்பட்டதாக போலீ சார் மீது புகார் எழுந்தது. நிதி நிறுவனத்தாரிடம் இருந்து பணம் பெற்று முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து எஸ்.பி., டி.எஸ்.பி. உட்பட பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இன்ஸ்பெக்டர்கள் சண்முகய்யா, மோகன்ராஜ் ஆகிய இருவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருப்பூர் டி.எஸ்.பி.யாக இருந்த ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைக்கப்பட்டார். போலீஸ் அதிகாரிகள் சிக்குகிறார்கள் இதையடுத்து எஸ்.பி., டி.எஸ்.பி. உட்பட பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இன்ஸ்பெக்டர்கள் சண்முகய்யா, மோகன்ராஜ் ஆகிய இருவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருப்பூர் டி.எஸ்.பி.யாக இருந்த ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைக்கப்பட்டார். இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி பாசி போரெக்ஸ் டிரேடிங் நிறுவன இயக்குனர் கமலவள்ளி மாயமான வழக்கில் அவர் கடத்தப்பட்டதாகவும், போலீசார் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக உளவுத்துறை போலீசார் உள்ளிட்டோர் விசாரணையை மேற்கொண்டனர். திருப்பூர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளளதாக கூறப்பட்டது. இதையடுத்து, நிதி நிறுவன இயக்குனர் மாயமான வழக்கு ஆள் கடத்தல் வழக்காக மாற்றப்பட்டது. இது தொடர்பாக நிதி நிறுவன இயக்குனர் கமலவள்ளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர் பாக அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜராகி நிதி நிறுவன இயக்குனர் கமலவள்ளி நீதிபதி முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், ஆள் கடத்தல் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கின் கீழ், இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அருண் கூறியதாவது: பாசி நிதி நிறுவன இயக்குனர் கடந்த டிசம்பர் மாதம் மாயமானார். தான் மாயமாகவில்லை என்றும், போலீஸ் அதிகாரிகள் உத்தரவின் பேரில் தான் கடத்தப்பட்டதாகவும் அவர் போலீசிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு, ஆள் கடத்தல் வழக்காக மாற்றப்பட்டது. அதன்படி, இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலமும் அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணை தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும், “ என்றார்.
______________________________________________
திருப்பூர், மார்ச் 7:
பாசி நிதி நிறுவனத்தின் மீது இதுவரை 29, 700 ஆயிரம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புகார்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விரைவில் விசாரணை மேற்கொள்வார்கள் என்றும் கோவை சரக டி.ஐ.ஜி. பாலநாகதேவி தெரிவித்தார். திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி போரெக்ஸ் நிதி நிறுவனம் மீது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, நிதி நிறுவன செயல்பாடு முடக்கப்பட்டது. நிதி நிறுவன இயக்குனர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர். மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பூர் மாவட்ட எஸ்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணம் வினியோகிக்கப்பட்டு வந்தது. மாவட்ட எஸ்.பி. அருண் மேற்பார்வையில், சுமார் ரூ.4 கோடி முதலீட்டாளர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற வேண்டும் என மாவட்ட எஸ்.பி. அருண் பரிந்துரைத்தார். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது ஏன் என்பது தொடர்பாக கோவை சரக டி.ஐ.ஜி. பாலநாகதேவி விளக்கமளித்தார்.
கோவை சரக டி.ஐ.ஜ.பாலநாகதேவி கூறுகையில், “பாசி நிதி நிறுவனத்தில் இதுவரை 29, 700 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இங்கு திருப்பூர் மட்டுமல்லாது மதுரை, திருநெல்வேலி, தர்மபுரி, கடலூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.எனவே, திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக உள்ளவர் இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் போதிய போலீசார் இல்லாத நிலையில், இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. பொருளாதார மோசடிகளை விசாரிப்பது தான் பொருளாதார குற்றப்பிரிவு பணி. எனவே அந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது” என்றார்.
நிதி நிறுவன விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டி.ஐ.ஜி. பாலநாகதேவி தெரிவித்தார்.
_____________________________________________
Dinakaran
07.03.2010
கோடிக்கணக்கில் பணம் கேட்டு நிதி நிறுவன இயக்குனரை கடத்தி பலாத்காரம் 5 பிரிவுகளில் வழக்கு
திருப்பூர், மார்ச் 7:
திருப்பூரில் நிதி நிறுவன இயக்குனர் மாயமான வழக்கில் அவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நிதி நிறு வன இயக்குனரை கடத்தி, மானபங்கப்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கடத்தல், மானபங்கம் உட் பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர், அவிநாசி சாலையில் செயல்பட்டு வந்த ‘பாசி போரெக்ஸ் டிரே டிங்‘ எனும் நிதி நிறுவனம், மோசடி செய்ததாக எழுந்த விவகாரத்தில், நிதி நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக போலீசார் மீது புகார் எழுந்தது. நிதி நிறுவனத்தாரிடம் இருந்து பணம் பெற்று முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து எஸ்.பி., டி.எஸ்.பி. உட்பட பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இன்ஸ் பெக்டர்கள் சண்முகய்யா, மோகன்ராஜ் ஆகிய இருவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருப்பூர் டி.எஸ்.பி.யாக இருந்த ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைக்கப்பட்டார். இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி பாசி போரெக்ஸ் டிரேடிங் நிறுவன இயக்குனர் கமலவள்ளி மாயமான வழக்கில் அவர் கடத்தப்பட்டதாகவும், போலீசார் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பாசி நிதி நிறுவன இயக்குனர் கமலவள்ளியை மர்ம நபர்கள் கடத்தி சென்று, மானபங்கப்படுத்தி அதனை வீடியோவில் பதிவு செய்து மிரட்டியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து நிதி நிறுவன இயக்குனர் மாயமான வழக்கில் மாற்றம் செய்யப்பட்டது. தன்னிச்சையாக காயம் விளைவித்தல் (323), முறையின்றி சிறை வைத்திட ஆள் கடத்தல் (365), அச்சுறுத்தி பறித்தல் (384), பெண் மானபங்கம் படுத்துதல் (351) மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் 2002 ஆகிய 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜராகி நிதி நிறுவன இயக்குனர் கமலவள்ளி நீதிபதி முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் உயர்அதிகாரியிடம் கேட்டபோது, “பாசி நிதி நிறுவன இயக்குனர் கடந்த டிசம்பர் மாதம் மாயமானார். தான் மாயமாகவில்லை என்றும், சில போலீஸ் அதிகாரிகள் உத்தரவின் பேரில் தான் கடத்தப்பட்டு, மானப்பங்கம் படுத்தப்பட்டதாக அவர் புகார் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு, ஆள் கடத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் மாற்றப்பட்டது. அதன்படி, இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இது தொடர்பாக கமலவள்ளி நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலமும் அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணை தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும், “ என்றார்.
_____________________________________________

Tirupur forex scam left customers angry

March 11th, 2010March 10: The bustling textile town of Tirupur that hardly made any news except for its surging exports woke up one gloomy morning during last September to a multi-crore fraud. Forex trading firm Paazee Trading India Private Ltd that had lured thousands of investors to put their money to reap rich dividends had bundled out and the organisers had vanished.
According to the police, the modus operandi of the company was to give post-dated cheques towards what it called ‘dividend amount’ at the time of making the deposits and for the deposit amount. For a deposit of Rs 1 lakh, the offer was close to thrice the amount. The company is suspected to have used the deposits to make hawala transactions.
Agitated customers thronged the police who immediately registered a case and began investigations. “However, the investigations were never carried out seriously,” says advocate D. Sivaprakasam, who has at least 200 clients who have lost their money to Paazee. “The initial FIR was so weak that the accused got bail instantly despite having over 29,000 complainants in the case.”
Although the police arrested three of the accused, Kathiraan, a senior reporter of a vernacular daily, his son Mohan Raj and woman associate Kamalavalli; all three were let off on bail.
Since then, several officers investigated the case with the intention of extorting money from the accused, the victims claim. The kidnapping, sexual assault and extortion were all a fallout of that.
When the number of agitated customers began to increase, the police transferred the case to the economic offences wing, which has begun investigations.
“However, several police officials made a lot of money in the case but did nothing to stop the firm from operating,” advocate Sivaprakasam, former secretary of the Tirupur advocates association, claims. “In fact, even today the firm is operating and continues to collect money from unsuspecting customers despite a pending investigation,” he says.
Police officials agreed that a lot of details in the initial investigations remained murky. “That is the reason we wanted to transfer the case to the economic offences wing,” they said.
_________________________________________
பாஸி நிதி நிறுவன மோசடி விசாரணை துவங்கியது
கோவை, மார்ச் 11:
திருப்பூரில் செயல்பட்டு வந்த பாஸி போரக்ஸ் டிரேடிங் நிதி நிறுவனம் தங்கள் முதலீட்டு பணத்தை மோசடி செய்துவிட்டதாக ஏராளமானோர் புகார் கூறினர். திருப்பூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதால் இந்த புகார்களை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கவும், இதற்காக 3 டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெ க்டர்கள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தும் டிஜிபி லத்திகா சரண் உத்தரவிட்டார். 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.
இதற்கான தனி அலுவலகம் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று முறைப்படி விசாரணை துவங்கியது. முன்ஜாமீன் பெற்றுள்ள நிதி நிறுவன உரிமையாளர்கள் கமலவள்ளி, கதிரவன், மோகன்ராஜ் ஆகியோர் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி மோதி லால் முன்பு நேற்று விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
__________________________________________________
பாசி’ நிதி நிறுவன பெண் இயக்குனர் கடத்தப்பட்டாரா?
திருப்பூர், மார்ச் 15:
திருப்பூர், அவிநாசி சாலையில் செயல்பட்டு வந்த ‘பாசி போரெக்ஸ் டிரேடிங்‘ நிதி நிறுவனம், மோசடி செய்ததாக எழுந்த விவகாரத்தில், நிதி நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக போலீசார் மீது புகார் எழுந்தது. இன்ஸ்பெக்டர்கள் சண்முகய்யா, மோகன்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி பாசி போரெக்ஸ் டிரேடிங் நிறுவன இயக்குனர் கமலவள்ளி மாயமான வழக்கில் அவர் கடத்தப்பட்டதாகவும், போலீசார் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இது ஆள் கடத்தல் வழக்காக மாற்றப்பட்டது. நிதி நிறுவன இயக்குனர் கமலவள்ளியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜராகி கமலவள்ளி நீதிபதி முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில், ஆள் கடத்தல் வழக்கு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். கடந்த இரு தினங்களாக பாசி போரெக்ஸ் நிதி நிறுவன இயக்குனர்கள் கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகியோரிடம் திருப்பூர் டி.எஸ்.பி. ராஜா விசாரணை மேற்கொண் டார். போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, “நிதி நிறுவன பெண் இயக்குனர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்தோம். இது தொடர்பாக நிதி நிறுவன இயக்குனர்கள் இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் கடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. கடத்தல் நாடகம் ஆடியுள்ளது தெரியவந்துள்ளது. ஆதாரங் களை சேகரித்து வருகிறோம். இவர் கடத்தப்படவில்லை என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும், “ என்றார்.
சஸ்பெண்ட் நடவடிக்கை ஏன்?:
இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகய்யா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. அருணிடம் கேட்டபோது, “இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகய்யா ஆகியோர் ஆள் கடத்தல் வழக்குக்காக சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. அவர்கள் வேறு பிரச்னைக்காகத்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்“ என்றார்.
விசாரணையில் திருப்பம்.
______________________________________________
Malaimalar
16.03.2010
திருப்பூரில் பாசி நிறுவன அதிபர் வீடு முற்றுகை 20 முதலீட்டாளர்கள் கைது
திருப்பூர், மார்ச். 16-
திருப்பூரில் பாசி நிறுவன அதிபர் வீட்டை முற்றுகையிட்ட 20 முதலீட்டாளர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் அவினாசி சாலை யில் இயங்கி வந்த பாசி போரெக்ஸ் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஏராளமான முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை வாரி சுருட்டியது. ரூ. 500 கோடி வரை வசூலிக்கப்பட்ட பணத்துக்கு சொன்னபடி வட்டி கொடுக்காமல் மோச டியில் ஈடுபட்டது.
மோசடி தொடர்பாக நிதி நிறுவன அதிபர்கள் கமலவள்ளி, கதிரவன், மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த டி.எஸ்.பி. ராமச் சந்திரன், இன்ஸ்பெக்டர் மோகன், சண்முகையா ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
திருப்பூர் குற்றப்பிரிவில் இருந்து இந்த மோசடி வழக்கு கோவை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பணத்தை திருப்பிக்கொடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணத்தை திருப்பி கேட்டு 1400 முதலீட்டாளர்கள் இதுவரை புகார் மனு செய்துள்ளனர். சிறிது சிறிதாக பணம் திருப்பி வழங்கப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால் விரக்தி அடைந்த 20 முதலீட் டாளர்கள் திருப்பூர் பிச்சம் பாளையத்தில் உள்ள நிதி நிறுவன அதிபர் கதிரவனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட் டனர். காவலுக்கு நின்ற போலீசார் அத்து மீறிய முதலீட்டாளர்களை கைது செய்தனர்.
நிதி நிறுவன அதிபர்களை கண்டித்து கோஷமிட்ட அவர்கள் பணத்தை முழுவதும் திருப்பி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கதிரவன் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
_____________________________________________
டெபாசிட் தொகை திரும்ப வழங்க கோரிநிதி நிறுவன இயக்குனர்வீடு முற்றுகை முயற்சி
திருப்பூர், மார்ச் 17:
முதலீடு தொகையை திரும்ப வழங்க கோரி, நிதி நிறுவன இயக்குனர் வீட்டை முற்றுகையிட முயன்ற முதலீட்டாளர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், அவிநாசி சாலையில், செயல்பட்டு வந்த ‘பாசி போரெக்ஸ் டிரே டிங்‘ எனும் நிதி நிறு வனம், தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டு டெபாசிட்களுக்கு கூடுதல் போனஸ் தருவதாக அறிவித்து செயல்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் நடந்து வந்ததாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் இந்த நிறுவன இயக்குனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, நிதிநிறுவனத்துக்கு போலீசார் ‘சீல்’ வைத்தனர்.
இது தொடர்பான வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட எஸ்.பி. தலை மையில் தனி குழு அமைத்து, டெபாசிட்தாரர்களுக்கு அவர்கள் டெபாசிட் செய்த தொகையினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. 10 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பண வினியோகிக்கும் பணியின் போது, சுமார் 4 கோடி அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொருளா தார குற்றப்பிரிவுக்கு மாற்றி தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, கோப்புகள் மற்றும் விண்ணப்பங்கள் அனைத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பண வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், முதலீட்டாளர்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் புதிய பஸ் நிலையத்தையடுத்த பாப்பா நகர் பகுதியில் உள்ள நிதி நிறுவன இயக்குனராக கதிரவன், மோகன் ராஜ் ஆகியோர் தங்கியுள்ள வீட்டை முதலீட்டாளர்கள் நேற்று முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை முதல் அங்கு ஏராளமான போலீ சார் குவிக்கப்பட்டனர். திருப்பூர் டி.எஸ்.பி. ராஜா மேற்பார்வையில் அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜபாண்டியன் தலைமையிலான போலீசார் பாப்பா நகர் பகுதியிலும், திருப்பூர் வடக்கு இன்ஸ்பெக்டர் தன்ராஜ் தலைமையிலான போலீசார் பாசி நிதி நிறுவனம் அமைந்துள்ள அவிநாசி ரோட்டிலும் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் இது தொடர்பாக போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 9.30 மணியளவில் முதலீட்டாளர் 12 பேர் அங்கு கூடினர். “திருப்பூர் பாசி நிதி நிறுவனத்தில் நாங்கள் முதலீடு செய்துள்ளோம். நாங்கள் முதலீடு செய்த தொகையை திரும்ப வழங்க கோரி வலியுறுத்தி வருகிறோம். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த நிறு வனம் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன் என தெரியவில்லை, “ என்றனர்.
இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்த 20க்கும் மேற்பட் டோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஏராளமானோர் முற்றுகையிட வரக்கூடும் என்பதால் அங்கு ஏராளமான போலீ சார் குவிக்கப்பட்டுள்ளனர். சாலைமறியலில் ஈடுபடக்கூடும் என்பதால் முக்கிய சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட 12 பேர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர். இனிமேல் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும், கோவை பொருளா தார குற்றப்பிரிவு காவல் மையத்தை தொடர்பு கொண்டு மட்டுமே விசா ரிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.
முதலீட்டாளர்கள் கைது திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பாப்பா நகர் பகுதியில் முதலீடு தொகையை திரும்ப வழங்க கோரி, நேற்று பாஸி நிதி நிறுவன இயக்குனர் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
____________________________________________
தினகரன்
‘பாசி’ நிறுவன முறைகேடு இன்று முதல் புகார் தரலாம்
கோவை, மார்ச் 17:
கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் மோதிலால் வெளியிட்ட அறிக்கை:
திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி டிரேடிங் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மீது திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு தற்போது கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து இன்று(17ம் தேதி) முதல் புகார் பெறப்படவுள்ளது. புகார் பெறுவதில் இடையூறு இருந்தால், அதை நிவர்த்தி செய்து பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புகார் மனு பெற கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டு புகார்கள் பெறப்படுகின்றன.
மனுதாரர்கள், நிறுவனத்தில் முதலீடு செய்த தொகைக்கான அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் நகல்கள், ஒப்பந்தம் ஏதேனும் செய்திருந்தால், அதற்கான ஆவணங்கள் அசல் மற்றும் 2 நகல்களை வழங்கவேண்டும்.
முதலீட்டாளர்கள் யாருடைய பெயரில் பணம் செலுத்தியுள்ளனரோ, அல்லது யாருடைய நிறுவன பெயருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளதோ அவர்கள் மட்டுமே புகாரை கண்டிப்பாக வழக்கின் அதிகாரியை நேரில் சந்தித்து கொடுக்கவேண்டும்.
____________________________________________
தினமலர் 17.03.2010
பாசி பாரக்ஸ் நிதி நிறுவனம் மீது இன்று கோவையில் புகார் தரலாம்: பொருளாதார குற்றப்பிரிவு அறிக்கை
கோவை: "பாசி பாரக்ஸ் டிரேடிங்' நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இன்று முதல் கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரலாம் என, மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட பாசி பாரக்ஸ் டிரேடிங் கம்பெனி மீது பல கோடி ரூபாய் மோசடி புகார் எழுந்தது. திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு, இதன் நிர்வாக இயக்குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். டி.ஜி.பி., லத்திகாசரண் உத்தரவில் இவ்வழக்கின் விசாரணை சமீபத்தில் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
விசாரணையை துவக்கியுள்ள கோவை பொருளாதார குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இன்று முதல் கோவையில் (மார்ச் 17) புகார் தரலாம். இதில் பிரச்னை ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்வது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்படும். புகார்களை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள தனி அலுவலகத்தில், பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ன் நேரடி கண்காணிப்பில் பெறப்படும்.
பணம் செலுத்தி ஏமாந்த டிபாசிட்தார்கள் தங்கள் புகார் மனுவுடன் நிதி நிறுவனத்தில் டிபாசிட் செய்த தொகைக்கான அசல் ஆவணங்கள் மற்றும் அதன் நகல், கம்பெனி ஏஜன்டுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றிய எழுத்து மூலமான ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவே புகார் பெற இயலும் என்பதால், சூழ்நிலைக்கேற்ப பிறப்பிக்கப் படும் உத்தரவுக்கு முதலீட்டாளர்கள் கட்டுப்பட வேண்டும். யாருடைய பெயரில் பணம் செலுத்தப்பட்டதோ, யாருடைய பெயருக்கு கம்பெனி செக் கொடுக்கப்பட்டுள்ளதோ அவர் மட்டும் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் தர வேண்டும். இவ்வாறு, கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
___________________________________________
தினமலர்
கோவை பொருளாதார குற்ற பிரிவு போலீசில் பாசி நிறுவனம் மீது 1 மணி நேரத்தில் 100 பேர் புகார்
கோவை, மார்ச். 17- திருப்பூரை தலைமையிடமாக கொண்டு பாசி பாரக்ஸ் டிரேடிங் கம்பெனி என்ற தனியார் நிறவனம் செயல்பட்டு வந்தது. இதன் இயக்குனர்களாக மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் இருந்தனர்.

இதில் ஏராளமானோர் பணம் செலுத்தினர். அவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பாசி நிறுவனத்தினர் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாசி நிறுவன இயக்குனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது வழக்கு விசாரணை கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள தனி அலுவலகத்தில் இன்று முதல் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
புகார் கொடுக்க ஏராளமானோர் இன்று குவிந்து இருந்தனர். காலை 10 மணிக்கு புகார்கள் பெறப்பட்டது. 1 மணி நேரத்துக்குள் 100-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.
பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் தங்கள் புகார் மனுவுடன் நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்த தொகைக்கான அசல் ஆவணங்கள் மற்றும் அசல் நகல், கம்பெனி ஏஜெண்டுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றிய எழுத்து மூலமான ஆவணங்கள் ஆகியவற்றை அளித்தனர். புகார் மனு குவிந்த வண்ணம் உள்ளது.
__________________________________________
THEHINDU
The Tirupur Central Crime Branch Police recently registered a case against seven directors of the firm
Wednesday, Mar 17, 2010
Coimbatore: The Economic Offences Wing (EoW) of the Coimbatore Rural District Police probing into the Paazee Trading Firm case in which a number of investors were alleged to have been defrauded to the tune of several crores of rupees has invited complaints from defrauded investors.
Scam
The Tirupur Central Crime Branch Police recently registered a case against seven directors of the firm following complaints from investors of a forex scam.
Transferred
The case was transferred to the EoW unit of the Coimbatore Rural District Police.
It was decided to receive complaints from investors at the EOW office located at the Coimbatore City Police Commissioner's office from March 17.
Complainants are requested to submit their complaints with original documents such as agreements and receipts along with two photocopies.
_______________________________________________
தினகரன்
பாசி நிறுவன மோசடி புகார் ஒரே நாளில் 300 பேர் மனு

கோவை, மார்ச் 18:
திருப்பூர் பாசி டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காமல் ஏமார்ந்த 300 பேர் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போசில் புகார் கொடுத்தனர்.
திருப்பூர் பாசி டிரேடிங் நிறுவனத்தில் நடந்த நிதி முறைகேடு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக கோவையில் தனிப்பிரிவும், தமிழகத்தில் பிற மாவட்டங்களில் பொருளாதார குற்றப்பிரிவுகளிலும் நேற்று முதல் புகார் மனுக்கள் பெறப்படுகின்றன.
கோவை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்று திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. முதல் நாளான நேற்று மட்டும் 300 பேர் மனு கொடுத்தனர்.
ஏற்கனவே திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தியபோது புகார் கொடுத்திருந்த பலரும் நேற்று மனு கொடுத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் மனுக்களை பெற்ற பின்னர் கோவை மாவட்டத்தினரிடமும் மனு பெறப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
______________________________________________________
தினமலர் 18.03.2010
மோசடி நிறுவனம் மீது புகார் தர குவிந்தது கூட்டம் : களை கட்டியது கமிஷனர் அலுவலக வளாகம்
கோவை: 'பாசி பாரக்ஸ் டிரேடிங்' நிறுவனத்தில் டிபாசிட் செய்து ஏமாந் தவர்களிடம் இருந்து புகார் மனு பெறுவது துவங்கியதால், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகம் நேற்று களை கட்டியது.
திருப்பூரை சேர்ந்த 'பாசி பாரக்ஸ் டிரேடிங்' நிதி நிறுவனத்தில் தொழிலாளர்கள், தனியார் மற்றும் அரசு நிறுவன ஊழியர்கள் கோடிக்கணக்கில் டிபாசிட் செய்தனர். உறுதி அளித்தபடி டிபாசிட் தொகைக்கு வட்டி தராமல் இழுத்தடித்ததால், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர்.போலீஸ் விசாரித்து, 'பாசி பாரக்ஸ்' நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதை கண்டு பிடித்தனர். இதன் இயக்குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் மனுக்களை பெறத் துவங்கினர்.திருப்பூரில் 29 ஆயிரத்து 700 மனுக்கள் பெறப்பட்டன. பிற மாவட்டங்களில் 30 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. மிகப் பெரிய மோசடி நடந்திருப்பதைத் தொடர்ந்து சமீபத்தில் கோவை வந்த டி.ஜி.பி., லத்திகாசரண் வழக்கின் விசாரணையை கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற உத்தரவிட்டார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத் தில் புகார் மனுக்களை பெற தனி அலுவலகம் அமைக்கப்பட்டது.
டி.எஸ்.பி., மோதிலால் தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள், ஐந்து சப்- இன்ஸ்பெக்டர்கள் குழு நேற்று முதல், 'பாசி பாரக்ஸ்' நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார் மனுக்களை பெறத்துவங்கியுள்ளது.முதல் கட்டமாக நேற்று திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 170 பேரிடம் புகாரை பெற்றது. புகார் கொடுக்க வந்தவர்களிடம் மாதிரி புகார் மனுதரப்பட்டது. மனுவின் நகலுடன், நிதி நிறுவனத்தில் 'டிபாசிட்' செய்ததற் கான அசல் ஆவணங்கள், நகல், கம்பெனி ஏஜன்டுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், எழுத்து மூலமான ஆவணங் களை இணைத்து தர அறிவுறுத்தினர்.ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவே புகார் பெற இயலும் என்பதால், 'சூழ்நிலைக்கேற்ப பிறப்பிக்கப்படும் உத்தரவுக்கு முதலீட்டாளர்கள் கட்டுப்பட வேண்டும்' என முன் கூட்டியே கூறியிருந்தனர். திருப்பூர், சோமனூர், பல்லடம் மற்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த புகார்தாரர்கள் நேற்று ஏராளமாக குவிந்தனர்.திருப்பூர் மாவட்டத்தைத் தவிர வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 'டோக்கன்' கொடுக்கப்பட்டு, குறிப்பிட்ட தேதியில் ஆஜராகுமாறு கூறினர்.
பொருளாதாரக்குற்றப்பிரிவு அதிகாரி கூறுகையில், ' இவ்வழக்கில் பல ஆயிரம் புகார்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். தினம் 50 மனுக்கள் மட்டும் பெற முடியும். 'இருப்பினும், முதல்நாளான நேற்று 170 மனுக்களை பெற்றோம். அடுத்து வரும் நாட்களிலும் மனுக்களை பெறுவோம். 'தவிர, மாநிலம் முழுதும் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., க்கள் தலைமையிலும் 'பாசி பாரக்ஸ்' நிறுவனம் மீதான புகார் மனு பெறப்படும். அனைத்து மனுக்களும் பெறப்பட்டு, சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். பிறகே, கோவையில் விசாரணை நடத்தப்படும்' என்றார்.கோவை கமிஷனர் அலுவலக வளாகத்தில் புகார் அளிக்க வந்த கூட்டம், அதிகமாக இருந்தது. கமிஷனர் அலுவலகத்துக்கு வெளியே உள்ள 'ஜெராக்ஸ்' கடையில், வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியது.
__________ ____________________________
நிதிநிறுவன பெண் அதிபர் கடத்தல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை, மார்ச் 19:
திருப்பூரில் நிதிநிறுவன பெண் அதிபரை கடத்திய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி லத்திகா உத்தரவிட்டுள்ளார். திருப்பூரில் பாசி இன்வெஸ்ட்மென்ட் என்ற நிதிநிறுவனம் இயங்கி வந்தது. இந்நிறுவனம் மீது ஏகப்பட்ட மோசடி புகார்கள் வந்தன. இந்த வழக்கு, பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. அதேநேரத்தில் மோசடி நிதிநிறுவன உரிமையாளர் கோமளவல்லி என்பவரை, போலீசார் கடத்தி சென்று 3 நாட்கள் அடைத்து வைத்துள்ளனர். இதையடுத்து, தன்னை ஒரு டிஎஸ்பி மற்றும் 2 இன்ஸ்பெக்டர்கள் கடத்தி சென்று அடைத்து வைத்ததாகவும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் நீதிமன்றத்தில் கோமளவல்லி வழக்கு தொடர்ந்தார். பல கோடி ரூபாயை அதிகாரிகள் பறித்து கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் டிஎஸ்பி மற்றும் 2 இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த பிரச்னையில் ஐஜி அந்தஸ்தில் உள்ள ஒரு உயர் அதிகாரிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர். இதைத் தொடர்ந்து கோமளவல்லி கடத்தல் வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி லத்திகா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
__________________________________________
தினமலர்
போலீசார் பணம் பறித்ததாக புகார் நிதி நிறுவன இயக்குனரிடம் போலீசார் மீண்டும் விசாரணை இனி சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும்
திருப்பூர், மார்ச் 22:
தன்னை கடத்தி பணம் பறித்ததாக போலீசார் மீது நிதி நிறுவன இயக்குனர் தொடர்ந்த புகார் தொடர்பாக திருப்பூர் போலீசார் நேற்று மீண்டும் நிதி நிறுவன இயக்குனரிடம் விசாரித்தனர். இதையடுத்து இனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவர்களிடம் விசாரிப்பார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
திருப்பூர் அவிநாசி ரோட்டில் செயல்பட்டு வந்த பாசி போரெக்ஸ் எனும் நிதி நிறுவனம் மீது மோசடி வழக்கு பதிவு செய்த திருப்பூர் போலீசார், நிறுவனத்துக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான கமலவள்ளி என்பவர், “தன்னை போலீசார் கடத்தி சென்று, 3 நாட்கள் அடைத்து வைத்திருந்தனர். டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர். தன்னிடம் இருந்து பல கோடி ரூபாயை போலீஸ் அதிகாரிகள் பறித்துக்கொண்டனர், ” என போலீ சில் புகார் அளித்தார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலமும் அளித்தார்.
இது தொடர்பாக 2 இன்ஸ்பெக்டர்கள் சஸ் பெண்ட் செய்யப்பட்டனர். டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இதில் ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந் தது. போலீசார் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பெண் இயக்குனர் கடத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் பணம் பறித்தது, மிரட்டியது உள்ளிட்ட குற்றங்களில் போலீசார் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. லத்திகாசரண் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நிதி நிறுவன பெண் இயக்குனர் கமலவள்ளி, கதிரவன் ஆகியோரிடம் போலீசார் நேற்று மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். ஏ.டி.எஸ்.பி. விவேகானந்தன் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. அருணிடம் கேட்ட போது, “ஆள் கடத்தல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற் றம் செய்து உத்தரவிட்டுள் ளது. இனி இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. தான் விசாரிக்கும். சி.பி.சி. ஐ.டி.க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது தொடர்பாக அவருக்கு தகவல் தெரிவிக்கும் வகை யில், இந்த விசாரணை நடந் தது. எழுத்து மூலமாகவும் பெறப்பட்டது, ” என்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சாம்பசிவம் தலைமையிலான போலீசார் விசாரிப்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகய்யா உள்ளிட்டோரிடம் இவர்கள் விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.

அதிர வைக்கும் ஹவாலா மோசடி?

நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட பணம் அனைத்தும், வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் லாபத்தில் பணம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. போலீசாரிடம் கேட்டபோது, “சட்ட விரோதமாக பணத்தை வெளிநாடுக்கு கொண்டு சென்று, அங்கு டாலராக மாற்றுவது உள்ளிட்ட நடவடிக்கையில் நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர். இது சட்ட விதிகளுக்கு மாறானது. இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம், ” என்றனர்.
_________ _________________________________
தினமலர்
பாசி நிதி நிறுவன மோசடிவெளிநாட்டு வங்கியில் ரூ.96 கோடி முதலீடுதிருப்பூர், மார்ச் 23:
பாசி நிதி நிறுவனம் முதலீடு தொகையில் ரூ.96 கோடியை வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. மீதமுள்ள தொகை எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் அவிநாசி ரோட்டில் செயல்பட்டு வந்த பாசி போரெக்ஸ் எனும் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் மீது மோசடி வழக்கு பதிவு செய்த திருப்பூர் போலீசார், நிறுவனத்துக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்தில் தாங்கள் கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். இதன்படி, ரூ.600 கோடி வரை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில், நிதி நிறுவன இயக்குனர்களின் சொத்து பட்டியலை தயாரிக்கும் பணியை துவக்கியுள்ளது போலீஸ். அதன்படி வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் அசையும், அசையா சொத்து தொடர்பாக பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பணம் முழுவதும் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், ரூ.96 கோடி மட்டுமே வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்கில் உள்ளது. மீதமுள்ள தொகை கணக்கில் வராமல் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் முதலில் விசாரித்து வந்த திருப்பூர் போலீஸ் அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேட்டபோது, ‘’பாசி நிதி நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டதாக ரூ.96 கோடி மட்டுமே கணக்கில் காட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முதலீடு தொகை அனைத்தும் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கணக்கில் வராமல் வெளிநாடுகளில் முதலீடு நடந்திருக்க கூடும். அது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பார்கள்” என்றனர். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் வேறு ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
சொத்து விபரங்களை சேகரிக்கிறது போலீஸ்
____________________________________________
மாலைமலர்
திருப்பூர் “பாசி” நிதி நிறுவனம் மூடல்: மதுரை வாடிக்கையாளர்களிடம் ரூ.100 கோடி மோசடி; பொருளாதார குற்றப்பிரிவில் வரிசையில் நின்று புகார்
மதுரை, மார்ச். 23-
திருப்பூர் அவினாசி ரோட்டில் “பாசி” என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் நடந்து வந்தது. இதன் கிளைகள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. இதேபோல் வெளிமாநிலங்களிலும் இயங்கி வந்தது.
இந்நிதி நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் கட்டினால் தலா ரூ.13 ஆயிரத்து 700 வீதம் 4 மாதங்களுக்கு ஊக்கத்தொகையும், தவனை தேர்வில் முதலீடு பணம் திரும்ப வழங்கப்படும் என கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து இருந்தனர்.
இதை நம்பிய பொதுமக்கள் குறைந்தது ரூ.25 ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் பணம் கட்டினர். ஆரம்பத்தில் அறிவித்தப்படி பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
இதனால் நிதி நிறுவனம் மீது முழு நம்பிக்கை கொண்டு நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் சேர்ந்த வண்ணம் இருந்தனர்.
மதுரை மாவட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரம் பேர் பணம் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. பஸ் டிரைவர், கண்டக்டர்கள், அரசு ஊழியர்கள், சிறு வியாபாரிகள், நடுத்தர பொதுமக்கள் இதில் சேர்ந்துள்ளனர். இவர்களில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு ஒரு தவனை கூட ஊக்கத் தொகை கிடைக்கவில்லை.
இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 100 கோடி வரை மோசடி நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் மதுரை அண்ணாநகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2 நாட்களாக புகார் கொடுத்து வருகிறார்கள். முடிவில் புகார் கொடுக்கும்போது நிதி நிறுவனம் வழங்கிய “ஒரிஜினல்” செக்கை புகார் மனுவுடன் இணைக்க வேண்டும் என போலீசார் வற்புறுத்தி வந்தனர்.
ஆனால் எங்களுக்கு ஆதாரமாக இருப்பதே இந்த செக்குதான். இதை கொடுத்துவிட்டு நாங்கள் எங்கே போய் யாரிடம் கேட்க முடியும்? என எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டத்தை போலீசார் கைவிட்டு விட்டு புகார்களை மட்டும் பெற்று வருகிறார்கள்.
நேற்று முன்தினம் தொடங்கி இன்று மாலை வரை சுமார் 300 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மனுக்கள் அவ்வப்போது கோவை குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் பணம் கட்டி ஏமாந்த ஒருவர் கூறியதாவது:-
நிதி நிறுவனங்கள் மீது புகார் தெரிவித்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறுகிறார்கள். சமூக விரோதிகளை எப்படி புகார் கொடுக்காமல் போலீசார் பிடிக்கிறார்களோ அதே போல அதிக வட்டி கொடுப்பதாக அறிவித்து தொடங்கப்படும் நிதி நிறுவனங்களையும் கண்காணித்து ஆரம்பத்திலேயே தடுத்து இருந்தால் ஏழை அப்பாவி மக்கள் ஏமாந்து இருக்கமாட்டார்கள்.
எனவே அரசு இனிமேல் இப்படி தொடங்கப்படும் நிதி நிறுவனங்களை உடனே கண்டு கொண்டு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

புகார் கொடுக்கும்போது நிதி நிறுவனம் வழங்கிய “ஒரிஜினல்” செக்கை புகார் மனுவுடன் இணைக்க வேண்டும் என போலீசார் வற்புறுத்தி வந்தனர்.ஆனால் எங்களுக்கு ஆதாரமாக இருப்பதே இந்த செக்குதான். இதை கொடுத்துவிட்டு நாங்கள் எங்கே போய் யாரிடம் கேட்க முடியும்? என எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டத்தை போலீசார் கைவிட்டு விட்டு புகார்களை மட்டும் பெற்று வருகிறார்கள்.
_____________________________________________
திருப்பூரில் பாசி நிதி நிறுவனத்திடம் ஏமாந்த 60 ஆயிரம் பேர் ரூ.575 கோடி வரை மோசடி; நடந்து இருப்பதாக கண்டுபிடிப்பு
கோவை, மார்ச். 21-
திருப்பூரில் அவினாசி சாலையில் இயங்கி வந்த “பாசி பொரெக்ஸ்” என்ற நிதி நிறுவனம் ஒரு கவர்ச்சி திட்டத்தை அறிவித்தது. ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் மாதம் ரூ.13 ஆயிரத்து 750 வீதம் 4 மாதங்கள் பணம் தரப்படும். 5-வது மாதம் முதலீடு செய்த ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 13 ஆயிரத்து 750-ம் சேர்த்து தரப்படும். அதாவது 320 சதவீத வட்டி.
கவர்ச்சி திட்டத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் போட்டி போட்டு பணம் கட்டினர். முதலில் அறிவித்தபடி பணம் வழங்கிய இந்த நிதிநிறுவனம் பின்னர் இழுத்தடிக்க தொடங்கியது. நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்த முதலீட்டா ளர்கள் திருப்பூர் போலீசில் புகார் செய்தனர்.
நிறுவன பங்குதாரர்கள் கதிரவன், மோகன்ராஜ், கமலவள்ளி ஆகிய 3 பேரும், கைதாகாமல் தப்பிக்க முன்ஜாமீன் பெற்றனர்.
மோசடி வழக்கு, பொருளாதார குற்ற பிரிவுக்கு மாற்றப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. திலகவதியின் உத்தரவின் பேரில், ஐ.ஜி. விஜயகுமார் மேற்பார்வையில் பாசி நிறுவன புகார்களை பெற்று பதிவு செய்து பணத்தை திருப்பி கொடுக்க தனி பிரிவு தொடங்கப்பட்டது.
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள கோவை மாவட்ட குற்ற பிரிவு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மோதிலால் தலைமையில் போலீசார் புகார்களை பெற்று வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாசி நிறுவனத்தில் 60 ஆயிரம் பேர் பணம் கட்டி ஏமாந்துள்ளது தெரிய வந்துள்ளது. தினந்தோறும் 50 பேர் வீதம் புகார் மனுக்கள் பெறப்படுகிறது. புகார் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தொடும் என்றும், சுமார் 3 மாத காலத்திற்கும் மேல் புகார் வாங்கும் பணி நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 27 மாவட்டங்கள், உத்தரபிர தேசம், பீகார், ஒரிசா, குஜராத், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மராட்டியம், சட்டீஸ்கார் உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்தோரும் பல லட்சங்களை முதலீடு செய்துள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து 600 பேர் புகார் செய்ய முன்வந்துள்ளனர். இதனால் ஒவ்வொரு மாவட்ட குற்றபிரிவிலும் புகார்களை பெற்று கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
போலீசார் கணக்கிட்டுள்ளபடி இந்நிறுவனம் ரூ. 575 கோடி வரையில் வசூல் செய்து மோசடி செய்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இணைய தளத்தை பார்த்து பணம் கட்டியவர்கள் ஏராளம். விரைவில் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற ஆசையே முதலீட்டாளர்களை புதை குழியில் தள்ளி உள்ளது.
முதலீட்டாளர்களின் பணம் திரும்ப கிடைக்க குறைந்த பட்சம் 1 வருடம் ஆகும். அதுவும் நிதிநிறுவன அதிபர்களின் ஒத்துழைப்பை பொறுத்து அமையும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
தினந்தோறும் 50 பேர் வீதம் புகார் மனுக்கள் பெறப்படுகிறது. புகார் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தொடும் என்றும், சுமார் 3 மாத காலத்திற்கும் மேல் புகார் வாங்கும் பணி நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர். போலீசார் கணக்கிட்டுள்ளபடி இந்நிறுவனம் ரூ. 575 கோடி வரையில் வசூல் செய்து மோசடி செய்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
_______________________________________________
பாசி’ நிறுவனம் தொடர்பாக புகார் மனு கொடுக்கலாம்கோவை, மார்ச் 31:
திருப்பூரை மையமாக கொண்டு இயங்கிவந்த ‘பாசி’ டிரேடிங் கம்பெனி மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் அவற்றை நிர்வகித்து வந்த மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் மீது திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 24.9.2009 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தமிழக காவல்துறை டிஜிபி உத்தரவின்பேரில் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, புலன் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி மோதிலால் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாசி டிரேடிங் மற்றும் அதன் துணை நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட கோவை மாநகர், புறநகர், திருப்பூர் மற்றும் ஊட்டியை சேர்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இம்மோசடி தொடர்பாக மேலும் யாரேனும் புகார் மனு அளிக்க விரும்பினால் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி அலுவலகத்தில் நேரில் புகார் மனு அளிக்கலாம். புகார் அளிக்க வரும்போது, புகாருடன் மேற்படி நிறுவனத்தில் முதலீடு செய்த தொகைக்கு உண்டான அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் அதன் நகல்களை கொண்டுவர வேண்டும்.