Translator

Search This Blog

01.04.10 TO 31.12.10

பாசி’ நிதி நிறுவன மோசடிமாநிலம் முழுவதும் 3200 பேர் புகார்கோவை, ஏப். 3:
திருப்பூர் பாசி டிரேடிங் நிறுவன நிதி மோசடி தொடர்பாக 3200 பேர் மாநிலம் முழுவதும் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
திருப்பூர் ‘பாசி டிரேடிங்’ நிதி நிறுவன முறைகேடு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
டிஎஸ்பி மோதிலால் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்துகின்றனர். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து புகார்கள் பெறப்படுகின்றன.
கோவை மட்டுமில்லாமல் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் புகார்களை பெற்று வருகின்றனர். மேலும் பலர் புகார் அளித்து வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், மார்ச் 29ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 3199 புகார்கள் வந்தன. மொத்த மோசடி மதிப்பு ரூ.59.38 கோடி. இதுவரை நேரடியாக வந்து புகார் கொடுத்தவர்களின் மனுக்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் பதிவு தபாலிலும் புகார் அனுப்பியுள்ளனர்.
அத்தகைய புகார்தாரர்கள் மீண்டும் நேரில் வந்து பொருளாதார குற்றப்பிரிவில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுக்கான வாக்குமூலத்தை பதிவு செய்யவேண்டும்.
இதுவரை புகார் கொடுக்காமல் உள்ளவர்கள் தங்கள் மாவட்ட எல்லைக்குட்பட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுக்கலாம் என்றனர்.
______________________________________________
பாசி நிதி நிறுவன வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துவக்கினர்
திருப்பூர், ஏப். 4:
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.திருப்பூர் அவிநாசி ரோட்டில் செயல்பட்டு வந்த பாசி போரெக்ஸ் எனும் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் மீது மோசடி வழக்கு பதிவு செய்த திருப்பூர் போலீசார், நிறுவனத்துக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்தில் தாங்கள் மோ சடி செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். இதன்படி, ரூ.600 கோடி வரை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துவக்கியுள்ளனர். முதல்கட்டமாக நிதி நிறுவன இயக்குனர்களின் சொத்து பட்டியல் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகை எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை போலீ சார் சேகரிக்க துவங்கியுள்ளனர்.
ஏற்கனவே திருப்பூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வெளிநாட் டில் ரூ.96 கோடி முதலீடு செய்யப்பட்ட விவரங்கள் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, “பாசி நிதி நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டதாக ரூ.96 கோடி மட்டுமே கணக் கில் காட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முதலீடு தொகை அனைத்தும் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கணக்கில் வராமல் வெளிநாடுகளில் முதலீடு நடந்திருக்க கூடும். அது தொடர்பாக பொரு ளாதார குற்றப்பிரிவு போலீ சார் விசாரணையை துவக்கியுள்ளனர், ” என்றார்.
_________________________________________________
முதலீடு பணத்தை திரும்ப வழங்காமல் மோசடி
பாசி நிதி நிறுவன இயக்குனர் மீது மேலும் 3 வழக்குகள் பதிவுதிருப்பூர், ஏப்.14:
திருப்பூர் அவிநாசி ரோட்டில் பாசி போரெக்ஸ் எனும் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் மீது மோசடி வழக்கு பதிவு செய்த திருப்பூர் போலீசார், நிறுவனத்துக்கு சீல் வைத்தனர். திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் தொடரப்பட்ட இந்த வழக்கு முகாந்திரம் இல்லாமல் பதிவு செய்யப்பட்டதாக கூறி, நிதி நிறுவன இயக்குனர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. முதலீட்டாளர்களுக்கு முதலீடு தொகையை போலீஸ் முன்னிலையில் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தன் உத்தரவில் தெரிவித்திருந்தது.
அதன்படி, திருப்பூர் மாவட்ட போலீசாரால் சுமார் 500 பேருக்கு ரூ.4 கோடி வரை நிதி திரும்ப வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதையடுத்து, பணம் வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தில் தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. சுமார் ரூ.1000 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தொகை எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியாத நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே, தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி மதுரையைசேர்ந்த சரவணன், கன்னியாகுமரியை சேர்ந்த சம்பத், விருதுநகரை சேர்ந்த முருகபூபதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
தாங்கள் ரூ.29.05 லட்சம், ரூ.8 லட்சம், ரூ.19.45 லட்சம் முறையே ரூ.56.50 லட்சம் பாசி மார்க்கெட்டிங் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும், இதற்காக நிதி நிறுவனம் சார்பில் செக் வழங்கப்பட்டதாகவும், ஆனால், வங்கியில் போடப்பட்ட செக் பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டதாகவும், அந்த பணத்தை பெற்றுத்தரும்படியும் அவர்கள் தங்களது புகாரில் தெரிவித்திருந்தனர். புகாரினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அருணுக்கு உத்தரவிட்டது. அதன்படி, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல்மையத்தில் சரவணன், சம்பத், முருகபூபதி ஆகியோர் அளித்த புகாரின் பேரில், நிதி நிறுவன இயக்குனர்கள் கதிரவன், மோகன்ராஜ், கமலவள்ளி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ், 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. அருணிடம் கேட்டபோது, “பாசி நிதி நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். அதன்படி, இந்த வழக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரே விசாரிப்பர். இந்த வழக்கினை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. ஓரிரு நாளில் பொருளாதார குற்றப்பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்படும், “ என்றார்.
_______________________________________________
MOHANRAJ
As per Court order after oct 8th, we started repayment from our office immediately police issued the notice to us stop the repayment, and payment to be done only through commitee we accept for that, And we issues the cheques perday 1, 5 cr to the investors as per commitee direction in that first 10days its goes smoothly that is also only to the madurai customer especially Mr. suresh and Mr. Muthuramalingam because in this also police intimated us to give first preference to them and they make lot of problems in office, After that we came to know muthuramalingam and suresh take comission from the investors, like wise so many incidents happen only influenced people got the repayment through the police interferance, in between that we got the Solution New SP ARUN IPS and DSP Raja formed new commitee to settle payment to the investors, we settled around 4crores with in 10days, Suddenly high officials transfered the case to EOW so we are not able to continue the repayment..Till date Tamilnadu Police has not given NOC for our Foriegn Trading accounts and Our bank account.
In that stage we appealed in high court for Official Liquidator for the repayments and NOC to open our bank accounts in india and abroad. Now we filed a affidavit apart from the bank accounts and other thing we are ready to pay 1.5 crores weekly to the high court from other our Source, Once our bank accounts, income source get released and NOC we are ready to clear all dues within short period.
Still our only aim is to settle all the payments to all our valuable investors.

Only because of this we are facing so much of hurdles.

"EVERYTHING IS POSSIBLE"

MOHANRAJ KATHIRAVAN
______________________________________________________________
Finance firm directors offer to settle dues
Finance firm directors offer to settle dues
Special Correspondent
CHENNAI: Three directors of a finance company at Tirupur have submitted before the Madras High Court that they would deposit Rs.10.5 crore for settling the dues to depositors.
In his order on petitions seeking to cancel the anticipatory bail granted to K.Mohanraj, K.Kadhiravan and A.Kamalavalli of Paazee Trading Pvt. Ltd, Justice K.N.Basha said counsel for the accused had submitted that the accused were always ready to extend their cooperation for effective settlement to the affected persons. It was also submitted that the accused would extend their cooperation to the investigating officer (I.O) in transferring the amount from the account of the accused in HSBC Bank, Singapore.
Mr.Justice Basha said in view of the counsel's submission, in order to facilitate the I.O to take effective steps to transfer the amount and to work out the modalities for transferring the sum from the account of the accused, K.Mohanraj should appear before the I.O.
The court also placed on record that the three had also filed a common affidavit through the first respondent making voluntary offer to deposit Rs.1.50 crore on April 30 and thereafter to deposit Rs.1 crore once in a week for three weeks and Rs.1.50 crore once in a week for four weeks.
The matter has been posted for April 26.
______________________________________
TIMES OF INDIA
TNN, Apr 24, 2010, 03.47am IST
CHENNAI: The kingpin of Tiruppur's biggest financial fraud of recent times, involving deposits worth a whopping Rs 575 crore collected from over 43,670 persons, has offered to resolve the case amicably if the Madras high court appointed a retired judge of the court to handle the settlement. K Mohanraj, managing director of Paazee Trading Private Limited, told the high court that he had mobilised a total of Rs 575 crore from 43,673 persons till 2009. He had claimed to be receiving huge commissions from major insurance companies, brokerage from trading shares and commodities through Guide Investments. He promised handsome returns to investors. After a first information report was filed, he claimed, he had returned nearly Rs 433.6 crore, and that another Rs 78 crore was settled till April 3, 2010, after getting anticipatory bail. He admitted that he still owes about Rs 156 crore to over 32,624 depositors. Mohanraj's recent offer to settle all the claims and return at least the principal amount to all the depositors was made when criminal petitions were filed by a large number of investors seeking cancellation of anticipatory bail granted to him. Noting that most of the Rs 156 crore was lying with the HSBC Bank in Singapore, Mohanraj pleaded that his accounts be unfrozen and he be permitted to bring back the money from Singapore. He also offered to make payments in instalments, beginning April 30. Justice KN Basha permitted Mohanraj to appear before the investigation officer, who shall take active steps to transfer the amount lying in Singapore, and workout modalities for transferring it from Mohanraj's account to India. The judge also appointed two senior advocates -- B Sriramulu and V Gopinath -- to assist the court in the matter. Accepting his deferred payment schedule, the judge permitted Mohanraj to deposit Rs 1.5 crore on April 30, and then pay Rs 1 crore every week for three weeks thereafter. He should deposit Rs 1.5 crore once a week for a period of four weeks. Using these amounts, authorities must pay principal amount to depositors, after deducting any amount that has already been paid to them, the court said.
___________________________________________
THE HINDU
friday, May 14, 2010


Tirupur: Economic Offences Wing (EOW) sleuths conducted an intensive search at the house of the directors of Paazee Marketing Company situated at Pappa Nagar here on Thursday.
Official sources told The Hindu that the search was conducted in connection with the forex trading scam involving the company after obtaining the requisite warrant from a court in Coimbatore.
The sources added that computer hard disks and some documents had been seized from the house for verification of facts related to the case.
The seven-member team headed by Deputy Superintendent of Police (EOW) R. Motilal carried out the search from morning till late evening.
The sources said the case against the company was that it had allegedly cheated investors after making tall promises.
Prior to the registration of the case against the company, one of its directors had been working as reporter of a leading vernacular daily covering textile-related news in the city.Two Inspectors V. Mohanraj and E. Shanmugaiah and Deputy Superintendent of Police Rajendran who were earlier investigating the case were suspended.
___________________________________________________________________
THE HINDU
Tirupur: A group of investors who were allegedly defrauded by Paazee Marketing Company, a forex trading firm, on Wednesday thronged the office of Superintendent of Police seeking speedy redressal to their grievances. N. Prabhu, an investor from Madurai, told reporters that the investors from Madurai, Krishnagiri, Sivaganga, Tirunelveli and Bangalore, who had invested crores in the company, had come to Tirupur only on the promise given by one of the directors of Paazee Marketing Company that the investments would be returned to them. The investors, however, said the police officials were trying to turn them away without allowing them to meet the directors of the firm.
“They even threatened to arrest us if we continue with agitation asking the money back,” they said.
Mr. Prabhu said around hundred investors had taken a decision to stay back in the city till the cash they had invested into the company were returned.
____________________________________________________________________
20 -05 -2010
தினகரன்
பாசி நிதி நிறுவன மோசடி பணத்தை பெற்றுத்தரக்கோரி எஸ்.பி., அலுவலகம் முற்றுகை

திருப்பூர் : பாசி பா ரெக்ஸ் நிநி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பணத் தை திரும்ப பெற்றுத் தரக் கோரி எஸ்பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் அவிநாசி ரோட் டில் பாசி போரெக்ஸ் எனும் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பலர் ஏமாந்துள்ளனர். ஏமாந்தவர்களில் பலர் மோசடி செய்த பணத் தை திரும்ப பெற்றுத்தரக் கோரி 50 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் புகார் அளித்துள்ளனர். இதன்படி, ரூ.700 கோடி வரை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது. இந்த வழக்கு விசாரணையை பொருளா தார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர், பிச்சம்பாளையம், பாப்பா நகரில் உள்ள பாசி பாரெக்ஸ் நிதி நிறுவன இயக்குனர் வீட்டை வெளி மாவட்டங்களை சேர்ந்த முதலீட்டாளர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னறிவிப்பின்றி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்ததால் போலீ சார் அவர்களை கைது செய் தனர். இந்நிலையில் அதே முதலீட்டாளர்கள் நேற்று திருப்பூர் எஸ்பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பாசி பாரெக்ஸ் நிறுவனத்தில் தாங்கள் முதலீடு செய்துள்ள பணத்தை திருப்பித் தருமாறு கோரி அலுவலகம் முன் அனைவரும் திரண்டனர்.
அவர்களிடம் போலீஸ் உயரதிகாரிகள் பேச்சுவார்த் தை நடத்தினர். இதன் முடி வில், பாசி பாரெக்ஸ் நிறுவனத்திடமிருந்து பணத்தை திரும்ப பெற்றுத் தருவதாக போலீஸ் அதிகாரிகள் உறுதியளித்ததாக தெரிகிறது. இதையடுத்து முதலீட்டாளர்கள் திரும்பிச் சென்றனர்


______________________________________
21-05-2009
திருப்பூர்: பாசி பாரெக்ஸ் டிரேடிங் நிதிநிறுவன முதலீட்டாளர்கள் நேற்று திருப்பூர் எஸ்.பி., சந்தித்து மனு அளித்தனர்.திருப்பூர் பாசி பாரெக்ஸ் டிரேடிங் லிட்., நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 60 பேர் நேற்று, மாவட்ட எஸ்.பி., அருணை சந்தித்து மனு அளித்தனர். அவர்களிடம் ""நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை அமைதியான முறையில் திரும்ப பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்; போராட்டங்களில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் முதலீட்டாளர்கள் செயல்படக் கூடாது,'' என எஸ்.பி., அருண் அறிவுறுத்தினார். ""பாசி பாரெக்ஸ் டிரேடிங் நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான மோகன்ராஜ், முதலீட்டாளர்கள் செலுத்திய பணத்தை அவரது வீட்டுக்கு வந்தால் திருப்பி தருவதாக கூறியுள்ளார். அதன்படி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தருவார் என்று நம்புகிறோம். நாளை முதல், அமைதியான முறையில் அவரது வீட்டுக்கு சென்று பணத்தை வாங்கி கொண்டு செல்ல இருக்கிறோம்,'' எனமுதலீட்டாளர்கள் கூறினர்.
_____________________________________________
Dinakaran
திருப்பூர்: பாசி பாரெக்ஸ் டிரேடிங் நிதிநிறுவன முதலீட்டாளர்கள் நேற்று திருப்பூர் எஸ்.பி., சந்தித்து மனு அளித்தனர்.திருப்பூர் பாசி பாரெக்ஸ் டிரேடிங் லிட்., நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 60 பேர் நேற்று, மாவட்ட எஸ்.பி., அருணை சந்தித்து மனு அளித்தனர். அவர்களிடம் ""நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை அமைதியான முறையில் திரும்ப பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்; போராட்டங்களில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் முதலீட்டாளர்கள் செயல்படக் கூடாது, '' என எஸ்.பி., அருண் அறிவுறுத்தினார். ""பாசி பாரெக்ஸ் டிரேடிங் நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான மோகன்ராஜ், முதலீட்டாளர்கள் செலுத்திய பணத்தை அவரது வீட்டுக்கு வந்தால் திருப்பி தருவதாக கூறியுள்ளார். அதன்படி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தருவார் என்று நம்புகிறோம். நாளை முதல், அமைதியான முறையில் அவரது வீட்டுக்கு சென்று பணத்தை வாங்கி கொண்டு செல்ல இருக்கிறோம், '' எனமுதலீட்டாளர்கள் கூறினர்.
___________________________________________________
பாசி நிதி நிறுவன விவகாரம் மாற்று பெயரில் வழங்கிய செக்கிலும் பணம் இல்லை
திருப்பூர், மே 21: திருப்பூர், அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள பாசி போரெக்ஸ் எனும் நிதி நிறுவனம் மீது 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் இருந்து ரூ.700 கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் கள் பெறப்பட்டுள்ளன. திருப் பூர் மாவட்ட காவல்துறை விசாரித்து வந்த இந்த வழக்கு, கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கினை விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், தாங்கள் முதலீடு செய்ய தொகையை திரும்ப வழங்க வலியுறுத்தி கடந்த இரு தினங்களாக பாசி நிதி நிறுவன இயக்குனர் வீடு மற்றும் மாவட்ட காவல் அலுவலகம் ஆகியவற்றை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்றும் முதலீட்டாளர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். நேற்று கா லை மாவட்ட காவல் அலுவலகத்தில் குவிந்த முதலீட்டாளர்கள், மாவட்ட எஸ்.பி. அருணை சந்தித்து முறையிட்டனர். புகார் மனு ஒன்றையும் வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது.பாசி நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களான செக்குகளை கைப்பற்ற ‘சாங்கோ ஆன் லைன் டிரேடிங்’ என்ற பெய ரில் எங்களுக்கு பணம் தருவ தாக கூறி எங்களிடம் இருந்த பாசி நிதி நிறுவன காசோலை களை பெற்றுக்கொண்டனர். ஆனால் பணம் கொடுக்கவில் லை. ரசீது மட்டும் கொடுத்தனர். மேலும், ‘கைடு இன்வெஸ்ட்மென்ட் டிரேடிங்’ எனும் பெயரில் பணம் தருவதாக கூறி சாங்கோ நிதி நிறுவன ரசீதுகளையும் பெற்றுக்கொண்டனர். மேலும், ரசீதில் உள்ள தொகைக்கு 20 சதவீதத்துக்குரிய ரொக்கப்பணத்தையும் பெற்றுக்கொண்டனர். ஆனால் இதிலும் எங்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. சாங்கோ மற்றும் கைடு இன்வெஸ்ட்மென்ட் நிதி நிறுவனங்களுக்கு மதுரை யை சேர்ந்த பழனிசாமி, நசீர்பாய் ஆகிய இருவரும் உரிமையாளர்களாக செயல்பட்டு, எங்களிடம் இருந்து பழைய காசோலைகளை வசூலித்தனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.முதலீடு செய்த பணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலீட்டாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த மாவட்ட எஸ்.பி. அருண், ‘பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. நீங்கள் அங்கு தான் சென்று முறையிட வேண்டும். நிதி நிறுவன இயக்குனர் வீட்டுக்கு சென்று நீங்கள் முறையிடலாம் அதில் தவறு இல்லை. ஆனால், சட் டம் ஒழுங்கு பிரச்னை ஏற் படாத வகையில், கும்பலாக செல்லாமல் தனித்தனி குழு வாக சென்று முறையிடலாம், ’ என தெரிவித்தார். நேற்று மாவட்ட காவல் அலுவலகம் வந்த முதலீட்டாளர்கள் பலர், பணம் கிடைக்காததால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிய தாக கண்ணீர் விட்டு கதறினர். சிவகாசியை சேர்ந்த பெண் ஒருவர் மகளின் திருமணத்துக் காக சேர்த்து வைத்த தொகை யை இதில் முதலீடு செய்ததாக வும், 7 நாளில் மகளின் திரு மணம் நடக்க உள்ளது. ஆனால் பணம் என் னிடம் இல்லை என கண்ணீர் விட்டு முறையிட்டார். இதே போல் பல்வேறு காரணங் களை கூறி முதலீட்டாளர்கள் கண் கலங்கினர்.முதலீட்டாளர்கள் புகார்திருப்பூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத் தில் பாசி நிதி நிறுவனத்தில் முதலிடு செய்தவர்களை எஸ்பி., அருண் நேற்று சந்தித்தார். அப்போது காலில் விழுந்து ஒரு பெண் கதறி அழுகிறார்.
_____________________________________________
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் ஆவணங்களை சரி பார்ப்பதில் போலீசாருக்கு சிக்கல்
திருப்பூரில் பாசி நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தினர் பணத்தை மோசடி செய்து விட்டதாக பலர் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாசி நிதி நிறுவன நிர்வாக இயக் குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இந்த வழக்கை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாசி நிறுவன இயக்குனர்கள் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர் அப்போது பல் வேறு ஆவணங்களை கைப் பற்றினர். செக் புத்தகமும் கைப்பற்றப்பட்டது. சில ஆவணங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு இருந் தது. இது தொடர்பான டிஸ்குகளையும் போலீசார் எடுத்து வந்தனர். கோவையில் தற்போது அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் பாசி நிறுவனத்தில் இருந்து எடுத்து வந்த ஆவணங்களை சரி பார்ப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கம்ப்யூட்டர் டிஸ்குகளில் பாஸ் வேர்டு தெரியாததாலும் அதனை இயக்க முடிய வில்லை. இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாசி நிறுவனத்தில் பணம் கட்டியவர்களில் பெரும்பாலானோர் கணக்கில் காட்டப்படாத பணத்தையே டெபாசிட் செய்துள்ளனர். முன்னுக்குப்பின் முரணாக விபரங்கள் உள்ளதால் சரியான தகவல்களை சேகரிக்க முடியவில்லை. இதுவரை பாசி நிதி நிறுவனத் தில் பணம் கட்டி ஏமாந்ததாக 8 ஆயிரம் பேர் வரை புகார் கொடுத்துள்ளனர்.
_____________________________________________
Dinamalar Date 22.05.2010
பாசி பாரெக்ஸ் நிதி நிறுவன இயக்குனர் வீட்டின் முன் சமையல் முதலீட்டாளர்கள் காத்திருப்பு
திருப்பூர்: பாசி பாரெக்ஸ் டிரேடிங் நிதிநிறுவன இயக்குனர் வீட்டின் முன், நேற்று சமைத்து சாப்பிட்ட முதலீட்டாளர்கள், முதலீடு செய்த பணத்தை பெறாமல் ஊருக்கு திரும்புவதில்லை என கூறி, காத்திருந்தனர். திருப்பூர் அவிநாசி ரோட்டில் பாசி பாரெக்ஸ் டிரேடிங் லிட்., நிதி நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குனர்களாக, திருப்பூர் பாப்பா நகரைச் சேர்ந்த கதிரவன், அவரது மகன் மோகன்ராஜ், சென்னையைச் சேர்ந்த கமலவள்ளி ஆகியோர் செயல் பட்டனர். இந் நிதி நிறுவனம், முதலீடு செய்தவர்களுக்கு, அறிவித்தபடி பணம் தராமல் மோசடி செய்துவிட்டதாக பலர் தொடர்ந்த வழக்கு, கோவையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் உள்ளது. நிறுவனத்தில் முதலீடு செய்த பலருக்கு, தொகை திரும்ப கிடைக்காத நிலையில், கடந்த 18ம் தேதி பாசி பாரெக்ஸ் நிதி நிறுவன இயக்குனர் வீட்டை முற்றுகையிட்ட 14 பெண்கள் உட்பட 60 பேர், கைது செய்யப்பட்டனர். 19ம் தேதி டி.எஸ்.பி., ராஜாவையும், நேற்று முன்தினம், எஸ்.பி., அருணையும் நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில், பாசி பாரெக்ஸ் டிரேடிங் நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான மோகன்ராஜ், முதலீட்டாளர்கள் செலுத்திய பணத்தை, வீட்டுக்கு வந்தால் திருப்பி தருவதாக கூறியுள்ளார், என முதலீட்டாளர்கள் கூறினர்; நேற்று காலை 10.00 மணி முதல், திருப்பூர் காட்டன் மில் ரோடு பாப்பா நகரில் உள்ள நிதிநிறுவன இயக்குனர் மோகன்ராஜ் வீட்டுக்கு சென்று, வீட்டின் முன் காத்திருந்தனர். அவ்வீட்டின் முன்னால் கற்கள் வைத்து அடுப்பு மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அங்கு வந்த நிதி நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான கமலவள்ளி, பேச்சு நடத்தினார். "மோகன்ராஜ் வெளியூரில் உள்ளார்; முதலீடு செய்த பணத்தை கோர்ட் மூலமாகவே முதலீட்டாளர்களுக்கு திருப்பி தர முடியும், ' என்று அவர் கூறியதை, அங்கிருந்தவர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.தொடர்ந்து மாலை வரை முதலீட்டாளர்கள் காத்திருந்தனர். எனினும், நிதி நிறுவன இயக்குனர் மோகன்ராஜ், கதிரவன் ஆகியோர் அவர்களிடம் பேச்சு நடத்தவோ, முதலீடு செய்த பணத்தை திருப்பி தரவோ முன்வரவில்லை. முதலீட்டாளர்கள் கூறுகையில், "" முதலீடு செய்த பணத்தை திரும்ப பெறாமல், நாங்கள் ஊருக்கு செல்வதில்லை என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை; பணத்தை பெற்றுகொண்டுதான் செல்வோம், '' என்று கூறினர்.
____________________________________________
22-05-2010
SMS From PAAZEE
Dear customers, It is informed that NO MONEY was paid to any individual who had come to PAAZEE MD home. Amount will be given only thru District Revenue Officer. Don't believe any rumors.
________________________________________
23-05-2010
SMS From PAAZEE
Dear customers, Don't believe any rumor SMS. PAAZEE will REPAY the amount without fail only through DRO after the court order.
____________________________________________
7வது நாளாக தொடரும் முற்றுகை நிதி நிறுவன இயக்குநர் வீட்டின் முன் முதலீட்டாளர்கள் நூதன போராட்டம்

திருப்பூர், மே 23: பாசி ஃபோரெக்ஸ் டிரேடிங் நிதி நிறுவன இணையதளத்தில் இருந்து முதலீட்டாளர்களின் செல்​ஃபோன்களுக்கு பட்டை நாமம் என்று வந்த குறுந்தகவலை அடுத்து தென் மாவட்ட முதலீட்டாளர்கள் நிதி நிறுவன இயக்குநரின் வீட்டின் முன்பு ஞாயிற்றுக்கிழமை பட்டை நாமமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரிலுள்ள பாசி ஃபோரெக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட ஏராளமான தென் மாவட்ட முதலீட்டாளர்கள் கடந்த 7 நாட்களாக திருப்பூரில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட காவல்துறையின் அறிவுறுத்தலின்பேரில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் பாப்பா நகரிலுள்ள அந்நிதி நிறுவன இயக்குநர் கதிரவன், மோகன்ராஜ் வீட்டை அமைதியான முறையில் முற்றுகையிட்டதுடன், வீட்டின் முன்பே சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த சுமார் 36 ஆயிரம் முதலீட்டாளர்களின் செல்​ஃபோன்களுக்கும் பாசி நிதி நிறுவன இணைதளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வந்தது. அதில், பாசி முதலீட்டாளர்கள் முன்பு தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டால் நிதி நிறுவன இயக்குநர்களின் ஜாமீன் ரத்தாவதுடன், அனைத்து முதலீட்டாளர்களுக்கும் கிடைக்க வேண்டிய பணமும் பட்டை நாமம் சாத்தப்படும் என்று வாசகம் இடம் பெற்றிருந்தது.
இதனால், ஆவேசமடைந்த முதலீட்டாளர்கள் ஞாயிற்றுக்கிழமை நிதி நிறுவன இயக்குநர் வீட்டின் முன்பு பட்டை நாமம் அணிந்து கொண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து முதலீட்டாளர்கள் கூறுகையில், அமைதியான முறையில் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஓரிரு நாட்களில் எங்களுக்கு உரிய பணம் கிடைக்கவோ அல்லது அதற்கான வழிவகைகள் செய்யப்படவோ இல்லையென்றால், பாதிக்கப்பட்ட அனைத்து முதலீட்டாளர்களையும் திரட்டி வேறு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
முதலீட்டாளர்களின் இத்தொடர் முற்றுகை போராட்டத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
______________________________________________
பாசி நிறுவன முதலீட்டாளர்கள் திருப்பூரில் உண்ணாவிரதம்
திருப்பூர், மே 28:
பாசி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் தங்களது பணம் திரும்பக் கிடைக்க வலியுறுத்தி, திருப்பூரில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் (படம்) மேற்கொண்டனர்.திருப்பூரிலுள்ள பாசி ஃபோரெக்ஸ் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த தென் மாவட்ட முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை திரும்ப அளிக்கக் கோரி கடந்த 2 வார காலமாக அந்நிதிநிறுவன இயக்குநர் கதிரவன், மோகன்ராஜ் ஆகியோரது வீட்டின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்பிரச்னையில் எவ்வித முன்னேற்றமும் காணப்படாததை அடுத்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் திருப்பூர் குமரன் சிலை முன்பு வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் போது, உடனடியாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணம் கிடைக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
______________________________________________

தினகரன்
31-05-2010
மண்ணெண்ணெய் கேன்களுடன் ‘பாசி’ முதலீட்டாளர்கள் போராட்டம்திருப்பூர் : பாசி நிதி நிறுவன மோசடியில் தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி, முதலீட்டாளர்கள் 14வது நாளாக நேற்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மண்ணெண்ணெய் கேன்களுடன் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர், அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள பாசி போரெக்ஸ் எனும் நிதி நிறுவனம் மீது 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் இருந்து ரூ.700 கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்ட காவல்துறை விசாரித்து வந்த இந்த வழக்கு, கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கினை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தாங்கள் முதலீடு செய்ய தொகையை திரும்ப வழங்க வலியுறுத்தி கடந்த சில தினங்களாக பாசி நிதி நிறுவன இயக்குனர் வீடு மற்றும் மாவட்ட காவல் அலுவலகம் ஆகியவற்றை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 14வது நாளாக நேற்றும் முதலீட்டாளர்கள் பாசி நிதி நிறுவன இயக்குனர் வீடு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களுடன் 20க்கும் அதிகமான பாட்டில்களில் மண்ணெண்ணெய்களை நிரப்பி வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘‘அமைதியான வழியில் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட வேண்டும். தேவையற்ற வகையில் நடந்து கொள்ள கூடாது. அவ்வாறு நடந்து கொண்டால் நடவடிக்கை தீவிரமாகும்,’’ என போலீசார் எச்சரித்தனர். இது தொடர்பாக முதலீட்டாளர்களிடம் கேட்டபோது, ‘‘14 நாட்களாக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உயரதிகாரிகள் இல்லை எனக்கூறி போலீசார் ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளனர். அதன்படி, நாளைக்குள் முடிவு தெரியாவிட்டால், அடுத்தகட்டமாக போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்,‘‘ என்றனர். இது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

______________________________________________
THE HINDU
Tuesday, Jun 01, 2010
Investors of Pazee Marketing Company attempt self-immolation bid in Tirupur Collectorate on Monday.
Tirupur: Self-immolation bid by a group of investors in Paazee Marketing Company, a Tirupur-based forex trading firm, on the Collectorate premises created some tense moments on Monday.
The investors alleging that the company defrauded them to the tune of many crores of rupees after making promises of huge returns on their investments, came in large numbers to the Collectorate to submit a petition to the Collector seeking his intervention in the matter. Once they reached outside the chamber of the Collector, 10 people from the bunch of about 100 investors suddenly poured kerosene over their body and tried to set ablaze after police officials allegedly prevented them from meeting the Collector.
Police officials immediately overpowered them before they could set fire.
N. Suresh, an investor from Madurai, said the investors resorted to self-immolation bid only after it became apparent that concerned officials were not helping them to get back the money deposited with Paazee Marketing Company.
“We will definitely continue with our agitation till the investment was returned,” he added.
__________________________________________
தினகரன்

உடலில் திடீர் பாதிப்பு தீக்குளிக்க முயன்றவர்களில் 13 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

திருப்பூர் : திருப்பூர், அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள பாசி போரெக்ஸ் எனும் நிதி நிறுவனம் மீது 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் இருந்து ரூ.700 கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள் ளன. கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கினை விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தாங்கள் முதலீடு செய்ய தொகையை திரும்ப வழங்க வலியுறுத்தி கடந்த இருவாரங்களாக பாசி நிதி நிறுவன இயக்குனர் வீடு மற்றும் மாவட்ட காவல் அலுவலகம் ஆகியவற்றை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். உண்ணாவிரதம் உள் ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் பணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த முதலீட்டாளர்கள்,உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இவர்கள் அனைவரையும் கைது செய்த போலீ சார், மாலையில் விடுவித்தனர். இதையடுத்து மீண்டும் பாசி நிதி நிறுவன இயக்குனர் மோகன்ராஜ் வீடு முன்பு முதலீட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவர்களில் சிலருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து பலருக்கும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரண மாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 2 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் கள் அனைவரும் திருப்பூர் அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டனர். அருப்புக்கோட்டையை சேர்ந்த விவின் (5), ஜெய ராமன் (34), திருவண்ணாமலையை சேர்ந்த வெங்கடேஷ்வரன் (38), தேனியை சேர்ந்த சுரேந்திரகுமார் (32), திருப்பூர், 15 வேலம்பாளையத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் (41), மதுரையை சேர்ந்த தவமணி (26), சவுந்திரபாண்டி (35), விருதுநகரை சேர்ந்த செல்வம் (44), ஆறுமுகம் (29) ஆகிய 9 பேர் உள்நோயாளிகளாகவும், மதுரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (41), சண்முகவடிவு (65) ஈரோட்டை சேர்ந்த விஜயகுமார் (36), சிவகங்கையை சேர்ந்த செந்தாமரைச்செல்வி (36) ஆகிய 4 பேர் வெளிநோயாளிகளாவுகம் என மொத்தம் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரணம் என்ன? : உடலில் மண்ணெண்ணெய் பட் டால் உடனடியாக அவை தண்ணீர் ஊற்றி கழுவிவிட வேண்டும். இல்லையெனில், அவை தோல்களை அரித்து காயத்தை ஏற்படுத்தக்கூடும். அதன்படி நேற்று முன்தினம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இவர்கள், அதன் பின்னர் உடலில் தண்ணீரால் சுத்தப்படுத்தவில்லை.
அப்படியே இரவு உறங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை உடல் அரிக்கப்பட்டு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
____________________________________


Protest mode:Investors of Paazee Marketing Company observing fast in front of Tirupur railway station on Friday. — Tirupur: A group of investors in Paazee Marketing Company, a Tirupur-based forex trading firm, who were allegedly duped by the company observed fast here on Friday.
High returns
The investors, who had come from different parts of Tamil Nadu and from the neighbouring States like Karnataka, said that the company had made tall promises of high returns on their investment but did not stick to their words and subsequently, cheated the clients to the tune of a few crore of rupees.
Promises
The agitators alleged that the company directors were trying to reduce the intensity of agitation by coming out with fresh set of promises ever since the group besieged their houses at Pappa Nagar a few days ago.
“One of the directors came out with an offer of returning the investments just for the leaders of the group that have been staging a chain of agitations in the city including a sit-in protest in front of the directors' house, which we refused point blank,” they said.
The agitation, according to them, will continue till their investments were returned.
http://www.in.com/news/business/fullstory-investors-duped-by-trading-firm-observe-fast-14099547-6a8914cc81deae2448d88507960256595664879a-1.html

Investors arrested Staff Reporter Tirupur: As many as 35 investors in Paazee Marketing, who were allegedly defrauded by the firm, were arrested when they attempted to commence an indefinite fast here on Sunday. The investors said that they would continue their agitation till the company returns all the investment collected from them.
According to them, the Paazee Marketing company took investment in the pretext of currency trading and subsequently cheated them.

திருப்பூர் : திருப்பூரில் தொடர் உண்ணாவிரதம் இருக்க முயன்ற பாசி நிறுவன முதலீட் டாளர்கள் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் செயல்பட்ட, "பாசி பாரெக்ஸ் டிரேடிங்' நிதி நிறுவனத்தில், பணம் செலுத்திய முதலீட்டாளர்கள், முதலீடு செய்த பணத்தை திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தி இயக்குனர் மோகன்ராஜ் வீட்டின் முன் முகாமிட்டுள்ளனர். முற்றுகை, ஊர்வலம், உண்ணாவிரதம், தீக்குளிக்க முயற்சி, கலெக்டரிடம் மனு என பலவித போராட்டங்கள் செய்தும், முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்கவில்லை.
இந்நிலையில், அடுத்த கட்ட முயற்சியாக நேற்று காலை 9.00 மணியளவில் பாசி முதலீட்டாளர்கள் திருப்பூர் குமரன் சிலை முன் திரண்டனர். நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்கும் வரை, தொடர் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தனர். அனுமதியின்றி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
முதலீட்டாளர்கள் கூறுகையில், "பல கட்ட போராட்டங்களை நடத்தியும் எங்களது கோரிக்கை கவனிக்கப்படாமல் உள்ளது. போலீசார் கைது செய்தாலும், தொடர் உண்ணாவிரதம் இருப்போம்' என்றனர்.
___________________________________________

The Madras High Court has directed the Central Crime Branch police in Tirupur to take steps to defreeze the account of Paazee Trading Company in HSBC Bank in Singapore.
Justice M Sathyanarayanan gave the direction while passing interim orders on a batch of petitions from P Ramar and 54 others opposing the attempt of two persons to cancel the anticipatory bail granted to K Mohanraj, his father K Kathiravan of Thottipalayam in Tirupur and A Kamalavalli of Tambaram, directors of the company. ompany.
The judge directed the directors to deposit Rs 6 crore in the Madras High Court branch of the Indian Bank to the credit of the criminal original petition on or before July 6. They should furnish a further sum of Rs 4 crore in the same bank on or before July 20. In the meanwhile, the trio should appear before the Tirupur police and take all neces ry steps to defreeze their ccount in the Singapore ank. The police should also make all endeavours to de freeze the account for the purpose of disbursement to the depositors or inves tors, the judge added ENS

--------------------------------------------------------------------------
26/06/2010
First Published : 26 Jun 2010 03:13:17 AM IST
Last Updated :
சென்னை, ஜூன் 25: திருப்பூர் நிதி நிறுவனத்தின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸôருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாசி என்ற நிறுவனத்தில் முதலீட்டுப் பணத்தைத் திரும்ப அளிக்கவில்லை என்று போலீஸôரிடம் புகார்கள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர்கள் மூவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
இந்த முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பாசி நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு முன் ஜாமீனை ரத்து செய்தால், முதலீட்டுப் பணம் திரும்பவும் கிடைக்காது என்று கூறி இந்த மனுவை எதிர்த்து ராமர் உள்ளிட்ட 54 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
விசாரணைக்கு பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த நிதி நிறுவனம் தொடர்பான வழக்கில் ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் ஜூலை 20-ம் தேதிக்குள் அதன் இயக்குநர்கள் செலுத்த வேண்டும்.
இந்த நிறுவனத்தின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கில் உள்ள பணத்தை முதலீட்டாளர்களுக்கு விநியோகிக்க, வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க திருப்பூர் போலீஸôர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைக்கு நிறுவனத்தின் இயக்குநர்கள் உதவ வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : திருப்பூர் பாஸி பாரெக்ஸ் நிதி நிறுவன மோசடி குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க, சீனியர் வக்கீல் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.திருப்பூரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இருவருடன் சேர்ந்து இவர், "பாஸி பாரெக்ஸ்' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினார். அதிக வட்டி தருவதாகக்கூறி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட் டோரிடம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு திரட்டினர். குறிப்பிட்ட காலத்துக்குப்பின், இந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு,தர வேண்டிய தொகை தராமல் இழுத்தடிக் கப்பட்டது.அதிருப்தி அடைந்த முதலீட்டாளர்கள், திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் பல கோடி ரூபாய் மோசடி நடந் திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிதி நிறுவன உரிமையாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மோசடி பற்றி முதலீட்டாளர்களில் சிலர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீது விசாரணை நடத்த, தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம், கோவை மாவட்ட சட்ட மையத்துக்கு உத்தரவிட்டது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான நீதிபதி பாஸ்கரன், செயலாளர் நீதிபதி மகிழேந்தி ஆகியோர் ஐகோர்ட் உத்தரவுப்படி, மோசடியை விசாரிக்க நடவடிக்கை மேற் கொண்டனர். பாஸி பாரெக்ஸ் மோசடி பற்றி முழு விசாரணை நடத்த, சட்ட மையத்தில் பதிவு செய்துள்ள சீனியர் வக்கீல் ராஜேந்திரனை நியமித்துள்ளனர்.வக்கீலுக்கு அனுப்பியுள்ள உத்தரவு கடிதத்தில், "பாஸி பாரெக்ஸ் நிறுவனத்தில் நடந்த மோசடி பற்றியும், அதன் உரிமையாளர் மோகன்ராஜ் என்பவரிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். முதலீட்டாளர் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மீது எடுக்கப்பட்டநடவடிக்கை அறிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.பாஸி பாரெக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து, மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகாரை வக்கீல் ராஜேந்திரனிடம் தெரிவிக்கலாம். இவரை 94435 - 51511,99945 - 15500 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
_________________________________


நிதிநிறுவன அதிபர்களை கைது செய்ய உத்தரவு

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

சென்னை : திருப்பூர் பாசி நிதி நிறுவனம், பொதுமக்களிடம் இருந்து சுமார் ஸீ100 கோடி பணம் வசூலித்து மோசடி செய்துள்ளது என்று போலீசில் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நிதி நிறுவன இயக்குனர்கள் கதிரவன், கமலவல்லி, மோகன்ராஜ் ஆகிய 3 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி கே.என்.பாஷா விசாரித்து, முதல்கட்டமாக ஸீ10 கோடி பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும், அதன்பிறகு சிறிது சிறிதாக பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும், போலீசார் முன்பு ஆஜராகி, பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பி கொடுக்க உதவி செய்ய வேண்டும், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறி, மோகன்ராஜ் உட்பட 3 பேருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் இந்த நிபந்தனையை நிறைவேற்றாததால் மேற்கண்ட 3 பேரின் முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி போலீசார், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி மதிவாணன் நேற்று விசாரித்தார். அப்போது, போலீஸ் சார்பில் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் குமரேசன் ஆஜராகி, ‘உயர் நீதிமன்றம் மனுதாரர்களுக்கு விதித்த நிபந்தனையை 3 பேரும் சரியாக நிறைவேற்றவில்லை. முதல் கட்டமாக ஸீ10 கோடியை முதலீட்டாளர்களுக்கு கொடுத்து விடுகிறோம் என்று மனு தாக்கல் செய்துவிட்டு, அதை அமல்படுத்த தவறிவிட்டனர். கடந்த 4 மாதங்களில் பல முறை வாய்தா கொடுத்தும், பணத்தை செலுத்தவில்லை. வெளிநாட்டில் முதலீடு செய்த ஸீ93 கோடியையும் பெற்று தர நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இவர்களது முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிதிநிறுவன இயக்குனர்கள் 3 பேரின், முன் ஜாமீனை ரத்து செய்யவும், அவர்களை உடனே கைது செய்யவும் உத்தரவிட்டார்.
__________________________________________

திருப்பூர் நிதிநிறுவன அதிபர்கள் தலைமறைவு


திருப்பூர் : திருப்பூர் பாசி நிறுவன அதிபர்களின் முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தலைமறைவாயினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்ற னர். திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி போரக்ஸ் நிறுவனத்தில், கோவை, திருப்பூர் உட்பட பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். முதிர்வு காலத்தை அடைந்த பிறகும் பணம் வழங்காமல் இழுத்தடித்ததால், முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர். இதுவரை 10,100 பேர் புகார் செய்துள்ளனர். ஸீ100 கோடி அளவுக்கு இந்த நிறுவனம் மோசடி செய்துள்ளது.

இதையடுத்து பாசி நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில் மூவரும் கடந்த 2009 அக்டோபர் 8ல் முன்ஜாமீன் பெற்றனர். ஜாமீனை ரத்து செய்ய கோரி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தனர்.
நேற்றுமுன்தினம் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் குற்றவியல் தலைமை வக்கீல் குமரேசன் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மதிவாணன், மூவருக்கும் வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோரை கைது செய்ய போலீசார் முயன்று வருகின்றனர். திருப்பூரில் உள்ள இவர்களது வீட்டுக்கு நேற்று போலீசார் சென்றபோது பூட்டிக்கிடந்தது. மூவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
________________________________


Monday, 09.06.2010, (GMT+5.5)

Tirupur: Two special teams were formed to nab the three directors of Paazee Marketing Company, who absconded without remitting the money to investors as per the High Court's direction.

It is to be noted that the directors of the Paazee Marketing Company Kathiravan, Mohanraj and Kamalavalli managed to lure hundreds of crores as investments from thousands of persons with the assurance to repay t h e amount in double within a year by investing the collected money in for money in forex trading.

However, when they failed to return the investment, a case was registered at Tirupur in 2009. The High Court provided anticipatory bail on October 8, 2009, on the conditions that they would return the money to the investors and cooperate with the investigation.

Meanwhile, the case was shifted to Economic Offences Wing in Coimbatore. However, when the directors did not return the money as per the order, the High Court cancelled the anticipatory bail and issued orders to arrest them. Since the directors were not found at their home in Tirupur, they were declared absconding in order to evade arrest and two special teams were formed to nab them.
_____________________________________
13/09/2010 தினத்தந்தி
முதலீட்டாளர்களுக்கு பணம் கிடைக்க
உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
.






















______________________________________
தினகரன்
இணைய நாளிதழ் தொகுப்பிலிருந்து - நாள்: 16 / 09 / 2010

_________________________________________

THE HINDU

Police Inspector held

on extortion charge


The Crime Branch CID police, investigating the alleged fraud involving Paazee Forex Trading Company of Tirupur, have arrested an Inspector of Police on charges of extorting Rs. 3 crore from the Managing Director of the firm.
According to sources in the agency, Kamalavalli, the Managing Director, had lodged a complaint that some police officers took huge amount of bribe for not taking action against her and her partner in criminal cases registered by the Central Crime Branch of Tirupur police.
The cases were later transferred to the CBCID.
Acting on the instructions of the Additional Director General of Police (CB-CID) Archana Ramasundaram, a special team investigating the case examined witnesses and collected evidence regarding the involvement of suspected police officers and other private persons.
It came to light that Inspector Mohanraj, (now under suspension), had taken Rs. 3 crore from Kamalavalli. He was arrested and remanded to judicial custody, the sources added.
________________________________________

தினத்தந்தி 23/09/2010



















Supreme Court upholds dismissal of anticipatory bail for marketing firm owner


He allegedly cheated 60,000 depositors to the tune of Rs.556 cr.
The Supreme Court has declined to interfere with a Madras High Court order cancelling anticipatory bail granted to K. Mohan Raj, proprietor of Paazee Marketing Co, who allegedly cheated about 60,000 depositors to the tune of Rs.556 crore. A Bench of Justice Markandey Katju and Justice T.S. Thakur dismissed the appeal filed by Mohan Raj against the High Court order dated September 3 cancelling his anticipatory bail granted by the trial court on the ground that he had failed to abide by the conditions.
The Bench dismissed the appeal after hearing senior counsel Altaf Ahmed for the State and counsel P. Somasundaram for the appellant.
Mr. Ahmed explained to the court that Mr. Mohan Raj and two other accused started 10 companies. They managed to create an impression among the gullible public through their website and agents that the 10 companies were leading Forex trading companies, which would be able to give high returns.
It was submitted that so far 9,238 complaints had been received and more were pouring in from all parts of the country. Since he had failed to implement any of the conditions, the High Court cancelled the anticipatory bail and he was not in jail even for a single day, counsel said.
On behalf of the appellant it was submitted that he was willing to deposit Rs.1 crore each month for the first two months and Rs.3 crore, thereafter, every month. Since all the business accounts were frozen he was unable to operate the accounts. The Bench said the appeal had no merit and dismissed it.
_____________________________________________

Dinamalar - No 1 Tamil News Paper


அக்டோபர் 07,2010,22:49 IST
"ஆன்லைன் டிரேடிங்' நிறுவனம் நடத்தி, 30 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் 750 கோடி ரூபாயை மோசடி செய்த "பாஸி குரூப் ஆப் கம்பெனீஸ்' நிறுவன இயக்குனர்கள் மூவர், வெளி நாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, விமான நிலையங்கள் தோறும் பாது காப்பு அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ""பாஸி குரூப் ஆப் கம்பெனீஸ்' என்ற "ஆன்லைன் டிரேடிங்' நிறுவனம், கடந்த 2009ல் நிதி மோசடி புகாருக்கு உள்ளாகி, மூடப்பட்டது. இதில், 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 750 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர். இம்மோசடி தொடர்பாக, "பாஸி' நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி மீது திருப் பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின், இவ்வழக்கு கோவை மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு போலீஸ் விசாரணைக்கு மாற்றப் பட்டு தீவிர விசாரணை நடக்கிறது. இதுவரை 10 ஆயிரம் முதலீட் டாளர்கள் 211 கோடி ரூபாய் மதிப் பிலான புகார்களை அளித்துள்ளனர். நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்களில் மதுரையை சேர்ந்தவர்களே அதிகம். தவிர, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டில்லி, அரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர் களும் லட்சக்கணக்கான ரூபாயை முதலீடு செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி நிறுவன இயக்குனர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது தலைமறைவாகினர். முத லீட்டாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை "செட்'டில் செய்து விடுவதாகக்கூறி முன்ஜாமீன் பெற்றனர். கூறியபடி, பணத்தை திருப்பித்தராத நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி மூவரின் முன்ஜாமீன் உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. மூவரும் மீண்டும் தலை மறைவாகி, சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள், "மோசடி நிறுவன இயக்குனர்கள், முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பி தருவதாக கூறி, சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்று, ஐந்து முறை உத்தரவை நீட்டித்துக் கொண்டனர். எனினும், பணத்தை ஒப்படைக்காமல் மோசடி நோக் கில் தலைமறைவாகியுள்ளனர்' என்ற வாதத்தை முன்வைத்தனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட சுப்ரீம் கோர்ட், மோசடி நிறுவன இயக்குனர்களின் முன் ஜாமீன் கோரும் மனுவை தள்ளு படி செய்தது. மீண்டும் சுறுசுறுப் படைந்த பொருளாதார குற்றத் தடுப்பு போலீசார் மோசடி நபர்கள் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன், கமலவள்ளி ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். கோவை மாவட்ட பொருளா தார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது: மோசடி நிறுவனத்தில் குறைந்த மதிப்பிலான தொகையை முதலீடு செய்தவர்களே அதிகளவில் புகார் அளித்துள்ளனர். ஐந்து கோடி, 10 கோடி என பல கோடி ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்காமல் உள்ளனர். புகார் அளித்தால், இவ்வளவு பணத் துக்கான வருமான வழிமுறைகளை வருமான வரித்துறையிடம் சமர்ப் பிக்க வேண்டுமென்ற காரணமாக வும் இருக்கலாம். முதலீட்டாளர் களிடம் வசூலித்த 575 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, மோசடி நிறுவனத்தினர் வங்கி கணக்கில் செலுத்தாமல் மறைத்து வைத்துள்ளனர். எனவே, தலைமறைவு வாழ்க்கைக்கு இத்தொகையை அவர்கள் பயன்படுத்த வாய்ப் புண்டு. எமது தேடுதல் நட வடிக்கைக்கு பயந்து அந்நபர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் வாய்ப்பு உள்ளதால், இந்திய விமான நிலையங்களின் பாது காப்பு அதிகாரிகளுக்கு, போட்டோக் களை அனுப்பி உஷார் படுத்தியுள்ளோம். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
_________________________________________

தலைமறைவான அதிபர்கள் எங்கே? பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு முடங்கியதா?

தினகரன் 10/19/2010
திருப்பூர்: பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் முடங்கியுள்ளது.தலைமறைவாகியுள்ள நிதி நிறுவன அதிபர்களை கைது செய்யும் பணியையும் போலீசார் மேற்கொள்ளாததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது பாசி போரக்ஸ் எனும் நிதி நிறுவனம். திருப்பூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வந்த இந்த நிதிநிறுவனத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர், கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். இந்த நிதிநிறுவனம் முறையான அனுமதியின்றி செயல்படுவதாக கூறி கடந்த ஆண்டு திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
அறிவித்தபடி தங்களுக்கு நிதி நிறுவனத்தினர் பணம் வழங்கவில்லை என ஆயிரத்துக்கும் அதிகமானோர் திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்தனர். சுமார் ரூ.600 கோடி வரை மோசடி நடந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அங்கும் அதிகமானோர் புகார் அளித்தனர். கிட்டத்தட்ட ரூ.800 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்கும் என கூறப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்குவதாக கூறி, பாசி நிதி நிறுவன இயக்குனர்கள் கதிரவன், மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்தாண்டு முன்ஜாமீன் பெற்றனர். ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்காததால், இவர்களது முன்ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், மூவரையும் கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.
கைது செய்ய உத்தரவிட்டு 2 மாதங்களாக உள்ள நிலையில், வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலை உள்ளது. வழக்கில் தலைமறைவான நிதி நிறுவன அதிபர்கள் 3 பேரும் இன்னும் போலீசாரிடம் பிடிபடவில்லை.பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 2 தனிப்படையினரும், டி.எஸ்.பி. தலை மையில் ஒரு தனிப்படையும் என 3 தனிப்படையினர் இது தொடர்பாக தேடுதல் பணியை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
முதலீட்டாளர்கள் அதிர்ச்சி : திருப்பூர் பாசி நிதி நிறுவனத்தில் ஏராளமானோர் பலநூறு கோடியை முதலீடு செய்துள்ளனர். இவர்கள் தங்களது முதலீடு பணத்தை திரும்ப பெற்றுத்தர வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தங்கள் முதலீடு தொகை திரும்ப கிடைக்கும் என காத்திருந்தனர்.ஆனால், முன்ஜாமீன் ரத்தான நிலையில், இன்னும் இயக்குனர்கள் 3 பேரும் கைது செய்யப்படாததால் முதலீட்டாளர்கள் ஏமாற்ற மடைந்துள்ளனர்.‘‘உயர்நீதிமன்றத்தில் இயக்குனர்கள் அளித்த உறுதியின் அடிப்படையில் முதலீடு தொகையில் பெரும்பகுதி பணம் எங்களுக்கு கிடைக்கும் என நம்பியிருந்தோம். இந்நிலையில், முன்ஜாமீன் ரத்தானதால் நீதிமன்றத்தில் ஆஜராகி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்குவார்கள் என எதிர்பார்த்தோம். எதிர்ப்புக்கு மாறாக 3 பேரும் தலைமறைவாகினர். இன்னும் கைது செய்யப்படாததால் எங்கள் தொகை எங்களுக்கு கிடைக் குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது,‘‘ என்கின்றனர்.
இயக்குனர்களை பிடிக்க தீவிரம்
இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. மோதிலாலிடம் கேட்டபோது, ‘‘நிதிநிறுவன இயக்குனர்களை கைது செய்ய தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடந்து வருகிறது. மோகன்ராஜ், கமலவள்ளி, கதிரவன் ஆகிய 3 பேரும் தங்கியிருக்க வாய்ப்புள்ள பகுதிகளாக சில பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு தேடுதல் பணி நடந்து வருகிறது. மிக விரைவில் நிதிநிறுவன இயக்குனர்கள் 3 பேரும் சிக்குவார்கள். மேலும் உள்நாட்டில் உள்ள வங்கி கணக்கு மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கி கணக்குகளில் உள்ள நிதி நிலவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. விரைவில் இயக்குனர்கள் 3 பேரும் பிடிக்கப்பட்டு, நிதியை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,‘‘ என்றார்.
______________________________________________
தினத்தந்தி21/10/2010


























___________________________________________________


திங்கட்கிழமை, 15, நவம்பர் 2010

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த பாசி போரெக்ஸ் என்ற நிதி நிறுவனம் மீது, முதலீடு தொகைக்கு அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 40 ஆயிரம் பேரிடம் சுமார் ரூ.800 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நிதி நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகி யோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீதான முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

இதற்கிடையே வழக்கை விசாரித்து வந்த இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா, டி.எஸ்.பி. ராஜேந்திரன் ஆகியோர் ‘பாசி’ நிறுவன பெண் இயக்குனர் கமலவள்ளியை கடத்தி ரூ.2.95 கோடி பணம் பறித்ததாக கூறப்பட்டது. இவர்கள் 3 பேரும் சஸ் பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர் பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர்.

 டி.எஸ்.பி. மலைச்சாமி தலைமையிலான போலீசார், இரு மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜை கைது செய்தனர். இவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


இதற்கிடையே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு இன்ஸ்பெக்டரான சண்முகய்யா, முன்ஜா மீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


 கோவை முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெறலாம் என்றும், 2 பேர் தலா ரூ.10 ஆயிரம் பிணைய தொகை அளிக்க வேண்டும், தினமும் காலை 10 மணிக்கு வேலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி இன்ஸ்பெக்டர் சண்முகய்யா கையெழுத்திட வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.


இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகய்யா இன்று காலை கோவை முதன்மை நடுவர் நீதிமன்றத்துக்கு வக்கீல் ஜெயச்சந்திரனுடன் வந்தார். நீதிபதி  சத்தியமூர்த்தியிடம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.


இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டி.எஸ்.பி. ராஜேந்திரனுக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து, அவர் தனது மனுவினை திரும்ப பெற்றார். அதன்பின்னர் அவர் முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்யவில்லை.
___________________________________________________

Paazee scam inspector granted conditional bail

November 16th, 2010

Coimbatore, Nov. 15: Tirupur CCB inspector Mr E. Shanmugaiah, who allegedly extorted money from the fraudulent directors of Paazee Forex Trading Ltd during investigation, got anticipatory bail from the chief judicial magistrate’s court in Coimbatore on Monday.
Mr Shanmugaiah, who also briefly served as a Special Branch inspector, is under suspension on charges of extorting up to `3 crore while investigating the multi-crore Paazee scam case in Tirupur.
When Mr Shanmugaiah had sought anticipatory bail from the Madras high court, he had been ordered to surrender before the Chief Judicial Magistrate (CJM) in Coimbatore. Following this the petitioner appeared before judicial magistrate Mr Satyamoorthy (in-charge) as the CJM was on leave on Monday.
Mr Shanmugaiah received conditional bail after he promised to pay two sureties of `10,000 each. Mr Satyamoorthy also ordered the accused to report daily at 10.30am at the CBCID office in Vellore.
Another inspector of the Tirupur Central Crime Branch (CCB), Mr V. Mohanraj, also got conditional bail.
The directors of Paazee Forex Trading Company, Mr K. Mohanraj, Mr K. Kadhiravan and Mr A. Kamalavalli had duped thousands by luring them with a promise to double their investments through forex trading.
The directors, however, failed to return the public’s investments and a case was registered at Tirupur in 2009. The two above-mentioned police personnel, who investigated the case, were accused of being involved in dubious activities.
The three accused had obtained anticipatory bail from the High Court on October 8, 2009, on the condition that they would return the investors’ money but the high court later cancelled the anticipatory bail of the three as they did not return the money to investors and issued arrest orders.
The directors have been absconding since then and special teams are on the lookout for them.

___________________________



__________________________________________
வெளிநாட்டில் நிதி நிறுவன பணம் பதுக்கல் 10 ஆயிரம் பேர் ஏமாந்ததாக ஐ.ஜி., தகவல்
டிசம்பர் 23,2010

திண்டுக்கல் : திருப்பூர் பாசி நிதி நிறுவனத்தில், இதுவரை, 10 ஆயிரம் பேர் பணம் கட்டி ஏமாந்ததாக புகார் வந்துள்ளது. இந்த பணம், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி., விஜயகுமார் கூறினார்.


திண்டுக்கலில் ஆய்வு நடத்திய அவர் கூறியதாவது: அதிக வட்டி தருகின்றனர் என நம்பி, தனியார் நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் பணத்தை போட்டு ஏமாற வேண்டாம். அரசு வங்கிகள், தபால் அலுவலகங்களில் சேமிக்கலாம். திருப்பூர் பாசி நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏராளமானவர்கள் ஏமாந்துள்ளனர். இந்நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை நாங்கள் தேடி வருகிறோம். அவர்கள், ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கிடைக்காததால், சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டுள்ளனர். அந்நிறுவனத்தின் பணம் அனைத்தும் வெளிநாட்டில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிறுவனத்தில் ஏமாந்ததாக இதுவரை 10 ஆயிரம் பேர் புகார் தெரிவித்துள்ளனர். வத்தலக்குண்டு சாகா தொண்டு நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் 6,049 பேர் புகார் அளித்துள்ளனர். ஒரு கோடியே 30 ஆயிரம் ரூபாய் மோசடி புகார் கூறப்பட்டுள்ளது. இதில், 36 ஏஜன்ட்கள் உள்ளனர். கடந்தாண்டு மட்டும், 40 கோடி ரூபாய், பொருளாதார குற்றப்பிரிவு மூலம் பொதுமக்களுக்கு வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் 10 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
__________________________________________

Dinamalar - No 1 Tamil News Paper

 டிசம்பர் 28,2010

திருப்பூர்: திருப்பூரில் இழுத்து மூடப்பட்ட, "பாசி பாரெக்ஸ்' அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்செல்வதாக புகார் எழுந்துள்ளது. எஸ்.பி., அருண் விசாரித்து வருகிறார். திருப்பூர், அவிநாசி ரோட்டில், பாசி பாரெக்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டது; இதன் இயக்குனர்களாக, திருப்பூர் பாப்பா நகரைச் சேர்ந்த கதிரவன், மோகன்ராஜ் மற்றும் சென்னையை சேர்ந்த கமலவள்ளி ஆகியோர் செயல்பட்டனர். பணத்தை இரட்டிப்பாக்கி தரும் கவர்ச்சிகரமான திட்டத்தில், ஏராளமானோர் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர்; பணத்தை திருப்பி தருவதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார்களை அடுத்து, இந்நிறுவனம் மூடப்பட்டது. முதலீட்டாளர்கள், தங்களது பணத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இவ்வழக்கை விசாரிக்கின்றனர். இந்நிறுவன இயக்குனர்கள், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ளனர்; போலீசார், அவர்களை தேடி வருகின்றனர். இப்பிரச்னையில் இருந்து, "பாசி பாரெக்ஸ்' நிறுவன அலுவலகம் போலீசாரால் பூட்டப்பட்டுள்ளது; இரவு நேரங்களில் கள்ளச்சாவி போட்டு திறக்கப்பட்டு அலுவலகத்துக்குள் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள், பர்னிச்சர் பொருட்கள், கம்ப்யூட்டர்கள், ஜெனரேட்டர் உள்ளிட்ட பல பொருட்கள் திருடு போயுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்நிய நபர்கள் எளிதில் நுழைய வாய்ப்பில்லாத, அவ்வளாகத்தில் பூட்டப்பட்ட அறையை கள்ளச்சாவி போட்டு திறந்து பொருட்கள் திருடுவது மர்மமாக உள்ளது. எஸ்.பி., அருணிடம் கேட்ட போது, "பாசி பாரெக்ஸ் இயக்குனர்கள் மூவரும் தலைமறைவாக உள்ளனர்; அவர்கள் அந்த அலுவலகத்துக்கு வந்து பொருட்களை எடுத்திருக்க வாய்ப்பில்லை. பூட்டிக்கிடக்கும் அலுவலகம் என்பதால், பொருட்களை திருட வாய்ப் பிருக்கிறது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.